அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்..! சசிகலாவிடம் டென்சன் ஆன டிடிவி..!

By Selva KathirFirst Published Jul 29, 2021, 11:04 AM IST
Highlights

அமமுக உருவான போது உடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் தற்போது யாருமே தினகரனுடன் இல்லை. சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த போது ஏற்பாடுகளை செய்திருந்த பழனியப்பனும் அண்மையில் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். தற்போது மேல்மட்ட தலைவர்கள் மட்டும் அல்லாமல் அமமுக மாவட்டச் செயலாளர்களும் மறுபடியும் அதிமுக நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர்.

அமமுகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதற்கு காரணமே நீங்க தான் சின்னம்மா என்கிற ரீதியில் டிடிவி பேசிய பேச்சுகள் தான் தற்போது அமமுக வட்டாரத்தில் ஹாட் டாபிக்.

அமமுக உருவான போது உடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் தற்போது யாருமே தினகரனுடன் இல்லை. சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த போது ஏற்பாடுகளை செய்திருந்த பழனியப்பனும் அண்மையில் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். தற்போது மேல்மட்ட தலைவர்கள் மட்டும் அல்லாமல் அமமுக மாவட்டச் செயலாளர்களும் மறுபடியும் அதிமுக நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். டிவி விவாதங்களில் இதுநாள் வரை சின்னம்மா, டிடிவிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பேச்சாளர்களும் தற்போது திமுக, அதிமுக கதவை தட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இப்படி தினசரி அமமுக நிர்வாகிகள் வரிசையாக மாற்று கட்சியில் ஐக்கியமாக அது சசிகலாவை டென்சன் ஆக்கியுள்ளது. நீண்ட நாட்களாக டிடிவியுடன் இதுபற்றி எதுவுமே பேசாமல் அமைதி காத்து வந்தார் சசிகலா. ஆனால் நிர்வாகிகள் தொடர்ச்சியாக வெளியேறிய நிலையில், தான் தொலைபேசியில் பேசிய நிர்வாகிகளும் மாற்று கட்சிக்கு அதுவும் அதிமுகவிற்கு செல்வது சசிகலாவை கோபம் அடைய வைத்துள்ளது. இதனை அடுத்து டிடிவியை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார் சின்னம்மா. என்ன நடக்கிறது? நிர்வாகிகள் ஏன் இப்படி செல்கிறார்கள் என்று கோபமாக கேட்க, அதே கோபத்துடன் டிடிவி பதில் அளித்ததாக கூறுகிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் ஒதுங்காமல் களம் இறங்கியிருந்தால் அதிமுக இன்னும் டேமேஜ் ஆகியிருக்கும் தற்போது நமக்கு ஒரு செல்வாக்கு இருந்திருக்கும். ஆனால் வாய்ப்பை தவறவிட்டுவிட்டு இப்படி செல்போனில் அழைத்து நிர்வாகிகளிடம் பேசினால் மட்டும் போதுமா? என்கிற ரீதியில் டிடிவி எகிறியதாக கூறுகிறார்கள். கட்சி நிர்வாகிகள் தன்னை விட்டு செல்லவில்லை உங்களையும் விட்டுத்தான் செல்கிறார்கள் என்று தடலாடியாக கூற சசிகலா ஸ்டன் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். நிர்வாகிகள் அனைவருமே ஒரு எதிர்பார்ப்புடன் தான் நம்முடன் வந்தார்கள், அதனை நிறைவேற்றவில்லை என்றால் எப்படி இருப்பார்கள்? என்று டிடிவி லாஜிக்காக கேள்விகளை அடுக்க சசிகலா போன் இணைப்பை துண்டித்துவிட்டாராம்.

ஏற்கனவே சசிகலா தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தன்னிடம் ஆலோசிப்பது இல்லை என்கிற கோபம் டிடிவிக்கு இருந்ததாக கூறுகிறார்கள். அதன் வெளிப்பாடு தான் இப்படி சின்னம்மாவையே ஸ்டன் ஆக்கும் வகையிலான தொலைபேசி உரையாடல் என்கிறார்கள். விரைவில் சின்னம்மாவை சந்தித்து அண்ணன் சுமூகமாவார் அப்புறம் பாருங்கள் எங்கள் அரசியல் எழுச்சியை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள்.

click me!