தேர்தலில் எடப்பாடியாரை எதிர்த்து களமிறங்குவது இவரா..? திணறும் திமுக..!

By Thiraviaraj RMFirst Published Feb 18, 2021, 3:44 PM IST
Highlights

கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கிவிட்டு, தன் கட்சிக்காரங்களுக்கு சீட்டுகள் கொடுத்து முடித்து பிரசாரத்துக்கு கிளம்புவதுற்குள் இரு கட்சி விஐபிகளுக்கும் நாக்கு தள்ளி விடும்போல.

தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றி சுழன்றடித்து வருக்கிறார். கத்தி கணன்று வருகிறார் மு.க.ஸ்டாலின். ஓவ்வொரு தொகுதியிலும் தத்தமது கட்சியில் யாருக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெறுவார்கள் என்கிற பட்டியலை இப்போதே இவரும் கையில் வைத்துக் கொண்டு எந்தத் தொகுதியில் யாரை நிறுத்துவது என உளவு பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலைமையில், முதல்வர் எடப்பாடியாரை வெற்றி கொள்ள யாரை நிறுத்தலாம் என பல கட்ட யோசனையில் இறங்கி இருக்கிறது திமுக.  அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரான முருகேசன், சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதியைச் சேர்ந்தவர். இந்த தொகுதியில், 1996, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, தோற்றவர்.

மறுபடியும் இடைப்பாடி தொகுதியில் சீட் கேட்கிறார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க வலிமையான வேட்பாளரை, தி.மு.க., தலைமை தேடிக் கொண்டு இருக்கிறது. அதனால் முருகேசன், '’அப்படி என்றால், சங்ககிரி தொகுதியையாவது எனக்கு தாருங்கள்’’என அறிவாலய வட்டாரத்தையே சுற்றி சுழன்று கொண்டு வருகிறார். கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கிவிட்டு, தன் கட்சிக்காரங்களுக்கு சீட்டுகள் கொடுத்து முடித்து பிரசாரத்துக்கு கிளம்புவதுற்குள் இரு கட்சி விஐபிகளுக்கும் நாக்கு தள்ளி விடும்போல.

click me!