அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Feb 18, 2021, 1:54 PM IST
Highlights

20.01.2021: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன்கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.02.2021 மற்றும் 22.02.2021 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக 18.02.2021 தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  19.02.2021:  வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை  ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன்கூடிய மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

20.01.2021: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன்கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.02.2021 மற்றும் 22.02.2021 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன்கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்): பர்லியார்  (நீலகிரி ) 2, சிவகிரி  (தென்காசி ), அலகாரி எஸ்டேட்  (நீலகிரி ) தலா 1 செ.மீ, பதிவாகி உள்ளது. 18.02.2021 மற்றும் 19.02.2021 தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் கடலோர பகுதிகளில்  18.02.2021 இரவு 5:30  மணி வரை  கடல் அலைகளின் உயரம் 1.5  முதல் 2.3  மீட்டர்வரை  எழும்பக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  

 

click me!