சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என நாங்கள் யாரும் சொல்லவில்லை.. அந்தர் பல்டி அடித்த டிடிவி. தினகரன்..!

Published : Feb 18, 2021, 01:27 PM IST
சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என நாங்கள் யாரும் சொல்லவில்லை.. அந்தர் பல்டி அடித்த டிடிவி. தினகரன்..!

சுருக்கம்

தேர்தலில் அமமுக ஓட்டுக்களை பிரித்தால் நாம் வெற்றி பெற்று விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். அது நடக்காது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தேர்தலில் அமமுக ஓட்டுக்களை பிரித்தால் நாம் வெற்றி பெற்று விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். அது நடக்காது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்;- சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் சொல்லவில்லை. ஊடகங்கள் தான் தெரிவித்தது. சசிகலா தற்போது ஓய்வில் உள்ளார். ஓய்வுக்கு பின் அவரது அரசியல் வருகை குறித்து அவரே நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார். 234 தொகுதியில் தனித்து போட்டியா என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரிவிக்கிறோம். விருப்ப மனுக்களை வாங்குவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தமிழகம் முழுவதும் உணர்வுபூர்வமான அமமுக தொண்டர்கள் உள்ளனர். அமமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். 

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது என்பது உண்மை தான். ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் அட்டூழியம் எல்லாவற்றிற்கும் தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள். அமமுக ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுக்கும். சசிகலா அவர்கள் அதிமுகவை மீட்க சட்ட ரீதியாக போராடி வருகிறார். இதில் எந்த குழப்பமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். 

தேர்தலில் அமமுக ஓட்டுக்களை பிரித்தால் நாம் வெற்றி பெற்று விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். அது நடக்காது. தீய சக்தி திமுக ஆட்சி கட்டிலில் அமரவிடமோட்டோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!