சசிகலா பற்றி விமர்சிப்பது நாகரிகமல்ல.. மன்னார்குடி குடும்பத்தார் மீது திடீர் கரிசனம் காட்டும் KP.முனுசாமி..!

By vinoth kumarFirst Published Feb 18, 2021, 2:28 PM IST
Highlights

நான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா எந்த இடத்திலும் கூறவில்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு கூறுகின்றன என கே.பி. முனுசாமி கூறியுள்ளார். 

நான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா எந்த இடத்திலும் கூறவில்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு கூறுகின்றன என கே.பி. முனுசாமி கூறியுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் குப்பச்சிப்பாறை, வீரோஜிப்பள்ளி ஆகிய இடங்களில் மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான கே.பி. முனுசாமி பேட்டியளிக்கையில்;- சசிகலா எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாத ஒருவர். அவரைப்பற்றி தொடர்ந்து நாங்கள் விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. எந்த வகையிலும் தொடர்பு இல்லாத ஒரு நபரை பற்றி மீண்டும், மீண்டும் பேசுவது நாகரிகமாக இருக்காது. 

நான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா எந்த இடத்திலும் கூறவில்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு கூறுகின்றன. இதைப்பற்றி அதிகம் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவால் துரோகி என்ற அடையாளம் காணப்பட்டவர் டிடிவி தினகரன். அவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டு வருகிறார். 

ஆகவே, எந்த ரூபத்தில் வந்தாலும், அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாது என்றார். எங்கள் கூட்டணியில் யார் வருகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுடைய கொள்கை வேறு, பாஜவின் கொள்கைகள் வேறு. அவர்கள் கூட்டணிக்காக எங்களுடன் இணைகிறார்கள் என்றார்.

முன்னதாக அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோரே சசிகலாவையும் தினகரனையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கடந்த முறை பேட்டி அளித்த முனுசாமி, தினகரன் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டால் அமமுக அதிமுக இணைப்பு குறித்து தலைமை பரிசீலனை செய்யும் என தெரிவித்திருந்தார். இந்த பேட்டியிலும் சசிகலாவை வெளிப்படையாக அவர் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!