Sellur Raju: யார் தவறு செய்தாலும் அன்வர் ராஜா நிலைமை தான்.. தலைமையை தலையில் வைத்து கொண்டாடும் செல்லூர் ராஜூ.!

Published : Dec 02, 2021, 07:14 AM IST
Sellur Raju: யார் தவறு செய்தாலும் அன்வர் ராஜா நிலைமை தான்.. தலைமையை தலையில் வைத்து கொண்டாடும் செல்லூர் ராஜூ.!

சுருக்கம்

அதிமுகவில் சாதியில்லை, மதமும் இல்லை. அதிமுக என்றும் சாதி, மதம் கிடையாது. சாதி பார்த்திருந்தால் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ன சாதி என்ன மதம், அதை பார்க்காமல் தான் 50 ஆண்டுகள் கழகம் செயல்பட்டு உள்ளது.

அதிமுகவில் சாதி, மதம் பார்க்க மாட்டோம். அனைவருக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படும். அந்த அடிப்படையிலேயே இந்த புதிய அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவராக இருந்து வந்த மதுசூதனன் மறைந்ததை அடுத்து புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கட்சி விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இதுவரை கட்சி பொதுக்குழு உறுப்பினர்களால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில் அந்த விதியில் தற்போது புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இனி கட்சி உறுப்பினர்களால் தலைமை தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ;- அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்து கொண்டு அன்வர் ராஜா மீண்டும் மீண்டும் தவறு செய்துள்ளார். ஒரு மூத்த நிர்வாகி கழகத்தில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது. இன்று கழகம் ஒற்றுமையுடன் வலுவாக இருக்கிறது. நகர்ப்புற தேர்தல் வரவுள்ள நிலையில் கழகத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் அவரது பேட்டி அமைந்துள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வந்த அன்வர் ராஜா மீது தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.  எனவே யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு இந்த நிலை தான் வரும். கட்சியினர் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.

அதிமுகவில் சாதியில்லை, மதமும் இல்லை. அதிமுக என்றும் சாதி, மதம் கிடையாது. சாதி பார்த்திருந்தால் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ன சாதி என்ன மதம், அதை பார்க்காமல் தான் 50 ஆண்டுகள் கழகம் செயல்பட்டு உள்ளது. தமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. அப்படிப்பட்ட கட்சியில் சாதியாவது, மதமாவது. கட்சி ஒற்றுமைக்கு கலங்கும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று செயற்குழுவில் கூட சிறுபான்மை இனத்தை சேர்ந்த தமிழ்மகன் உசேன் தேர்வு தற்காலிக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்ஜிஆரின் தீவிர விஸ்வாசி தமிழ்மகன் உசேன். 

அதிமுக பணக்காரன், ஏழை வித்தியாசம் கிடையாது. வாரிசு அரசியல் இல்லாத கட்சி அதிமுக. அடுத்து யாரு வேண்டுமானாலும் தலைமைக்கு வரலாம் என்ற உருவாக்கக்கூடிய கட்சி ஒன்று என்றால் அது அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..
நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!