அதிமுகன்னா 13 … திமுகன்னா 21 … திக் திக்.. மே 23… என்ன நடக்கப் போகுது தமிழகத்தில் ?

By Selvanayagam PFirst Published Apr 22, 2019, 11:03 PM IST
Highlights

22 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னு அதிமுகவும், அதிமுகவிடம் இருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்க திமுகவும் கங்கனம் கட்டிக் கொண்டு  வேலை செய்து வரும் நிலையில் இரு கட்சிகளின் நிலை என்னவென்று பார்க்கலாம்..

18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம், கருணாநிதி, ஏ.கே.போஸ் , மற்றுன் கனகராஸ் ஆகியோர் மரணம் மற்றும் வழக்கில் சிக்கி நீதிமன்றத்தால் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டியின்  ஓசூர் தொகுதி என 22 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்று வருக்றது.

இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்ற சிலையில் மீதம் உள்ள 4 தொகுதிகளிலும் வரும் மே 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படுகிறது.


 
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி  ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், திமுக ஆட்சியை கைப்பற்றவும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

தமிழகத்தில்  மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் கைவசம் இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும். அதிமுக கூட்டணியிலிருக்கும் 114 எம்எல்ஏக்களில்  அதிமுக 111  மற்றும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு  ஆகியோர் உள்ளனர்.

திமுகவில், திமுக 88, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 மொத்தம் 97பேர் உள்ளனர். காலியாக 22 தொகுதிகள் உள்ளன. 

அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மொத்தம் 13 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ஏனென்றால் கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். 

அதேநேரம் அதிமுகவில் இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே தினகரனை ஆதரிக்கின்றனர். 

ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 105 ஆக குறைந்துவிடும். இதனால்தான் 13 தொகுதிகளில் வெற்றி தேவை. 

அதே நேரத்தில்  திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, மொத்தம் 21 தொகுதிகளில் வென்றாக வேண்டும் அப்படி வெற்றிபெற்றால் அவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். இவற்றில் ஒன்றிரண்டு குறைஞ்சாலும் கஷ்டம்தான் … 

click me!