இந்த நான்கு பேரும் நாடாளுமன்றத்துக்குள் கால் வைக்கக் கூடாது ! பாஜக கொடுத்த அசைன்மெண்ட் !! கிறுகிறுத்துப்போன எடப்பாடி!!

Published : Apr 22, 2019, 09:58 PM IST
இந்த நான்கு பேரும் நாடாளுமன்றத்துக்குள் கால் வைக்கக் கூடாது ! பாஜக கொடுத்த அசைன்மெண்ட் !!  கிறுகிறுத்துப்போன எடப்பாடி!!

சுருக்கம்

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த நான்கு பேரை நாடாளுமன்றத்துக்குள் கால்வைக்க விடக்கூடாது என்றும் அவர்களை தோற்கடிக்க என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை ஸ்பெஷல் அசைன்மெண்ட் கொடுத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.   

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் சித்தாந்த அரசியலை எதிர்த்து வரும கனிமொழி, ஆ,ராசா, திருமாவளவன் மற்றும் காங்கிரசில் இருந்தபடியே இந்து தத்துவார்த்த அரசியல் எதிர்ப்பாளரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நாடாளுமன்றத்துக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

இந்த நான்கு பேரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த  எடப்பாடியிடம் பாஜக அசைன்மெண்ட் கொடுத்திருந்தது.
இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்கள் முன்பு எடப்பாடியைத் தொடர்பு கொண்ட பாஜக மேலிடம் இத்திட்டம் குறித்து நினைவு படுத்தியுள்ளது. 

ஆனால் மத்திய அமைச்சர்கள் 8 வழிச்சாலை மற்றும் நீட் தேர்வு குறித்து பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் நமது கூட்டணிக்கு பின்னடைவைத் தந்துள்ளது எனக் கூறி சமாளித்திருக்கிறார்.

ஆனாலும் இது தொடர்பாக எடப்பாடியை பாஜக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிறுகிறுத்துப் போன முதலமைச்சர் என்ன செய்வதென்று கையைப் பிசைந்திருக்கிறார்.

எது எப்படியோ மே 23 ஆம் தேதி இந்த நான்கு பேரில் யார் யார் ? வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தெரியவரும். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!