
நாம என்ன சொல்றோம் அப்படிங்கிறதை விட, அடுத்தவன் என்ன சொன்னான்? அப்படிங்கிறதை கவனிக்குறதுலதான் நமக்கு ஆர்வம் அதிகம்.
அதிலும் அரசியல்வாதிகள் யார், யாரைப் பார்த்து, என்னென்ன சொன்னாங்க? அப்படின்னு தெரிஞ்சுக்குற அலாதியே தனி.
அதை டீல் பண்றதுதான் இந்த பகுதியோட நோக்கமே!...
* முதல்வருக்கு நான் கடிதம் கொடுத்தேனா இல்லையா என்பதை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
- மதுசூதனன்.
* லோக்சபா தேர்தலின் போது யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதாக கூறும் ரஜினியின் வரவை பார்த்து பயப்படவில்லை. அவரது ஆன்மிக அரசியலை பா.ஜ.க. வரவேற்கிறது.
- ஹெச்.ராஜா
* மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குறித்த தகவல்களை கேள்விப்படும்போது மிகப்பெரிய வேதனையடைகிறேன். இதை தடுப்பதற்குரிய அவசியம் இப்போது வந்திருக்கிறது.
- வெங்கய்யா நாயுடு.
* எம்.ஜி.ஆர். தனது வாரிசாக யாரையும் சொல்லவில்லை. அதேபோல் ஜெயலலிதாவும் யாரையும் தனது வாரிசு என குறிப்பிடவில்லை.
- பொள்ளாச்சி ஜெயராமன்.
* புயலில் காணாமல் போன மீனவர்களை நாங்கள் தேடுகிறோம் என கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான எரிபொருள், உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி.
* சட்டசபையில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம். எல்லா புகழுமே அம்மாவுக்கே உரித்தானவை.
- ஓ.பன்னீர் செல்வம்.
* தி.மு.க. மைனாரிட்டி அரசாக இருந்தபோது காங்கிரஸின் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போதைய அரசுக்கு எந்த ஆதரவும் கிடையாது. இது வீட்டிற்கு போக வேண்டிய அரசு.
- தினகரன்.
* கிரிக்கெட் காய்ச்சலில் இருந்த தேசம் இப்போதுதான் ஏனைய விளையாட்டுக்கள் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
- பேட்மின்டன் வீராங்கனை சிந்து
* இந்த ஆட்சியை மக்கள் எழுச்சியால் விரட்டி அடிப்பதன் மூலம் மட்டுமே அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் தமிழகத்தை காப்பாற்ற முடியும்.
- ராமதாஸ்.
* ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வெளியில் வந்து பேச அஞ்சியவர்கள் எல்லாம் இன்று துள்ளிக் குதிக்கின்றனர்.
- செம்மலை.