அப்படி இருந்த வள்ளுவரை இப்படி ஆக்கியது யார்..? திமுக மீது பழிபோடும் பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Nov 4, 2019, 11:57 AM IST
Highlights

திருவள்ளுவரை இஸ்லாமியராக, கிறிஸ்தவராக, இந்துவாக சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் அவரது உருவத்தை திரித்து மாற்றியது திமுக என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர் ‘’திருவள்ளுவர் ஒரு இந்து குறள் உலகப்பொதுமறை. இவர் கிறிஸ்தவர். இஸ்லாமியர்-இவர்கள் நூல் உலகப பொதுமறை என்று நாம் கண்டதுண்டா? காவி, வெள்ளை, பட்டை, பாழும் நெற்றி எதுவாயினும் வள்ளுவர் இந்து- இந்து என்றால் மதசார்பற்றவன். காவி இந்தியாவின் கலாச்சாரம் ’’ எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன், ‘’வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தவர் பிரிட்டிஷ் அரசு Mint தலைவரான எல்லிஸ் பிரபு 1800களில்! தங்க நாணயத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இந்த தியான உருவம் சமணத்துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை’’எனத் தெரிவித்தார்.

 

பாஜக நிர்வாகி கே.டி.ராகவன் கூறுகையில், ’’இப்படி இருந்த திருவள்ளுவர் படத்தை ஸெக்யூலராக மாற்றுவதாக சொல்லி பித்தலாட்டம் செய்தது திமுக’’எனத் தெரிவித்துள்ளார். 

நெட்டிசன் ஒருவர் ‘’வள்ளுவன் சொன்ன வாழ்க்கை நெறிகளை பற்றி பேசாமல் அவர் இந்துவா? பட்டை போட்டு இருந்தாரா?  திராவிடனா? கடவுள் மறுப்பாளரா? என சண்டை போட்டுத் திரிவதை விட கேவலம் இந்த உலகத்தில் என்ன இருக்க முடியும்?’’எனத் தெரிவித்துள்ளார். 

click me!