சொந்த மண்ணிலேயே இப்படி அசிங்கப்படுத்துறீங்களே... டி.டி.வி.தினகரன் வேதனை..!

By Thiraviaraj RMFirst Published Nov 4, 2019, 11:15 AM IST
Highlights

சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை

வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க.,வின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்ட திருவள்ளுவரின் படத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. காவி நிறத்தில் உடை அணிந்து ருத்ராட்சம் தரித்தபடி அந்த திருவள்ளுவரின் திரு உருவப்படம் இருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சாணி வீசி அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘’தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும். உலகப்பொதுமறை என கொண்டாடப்படும் திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர், சாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானவர். தமிழ், தமிழினம் என்ற எல்லைகளைத் தாண்டி அவர் போற்றப்படுகிறார்.

வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை.

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

 

வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!