வான் புகழ் வள்ளுவருக்கு வந்த சோதனை... சிலை மீது சாணி வீசி அவமானம்..!

Published : Nov 04, 2019, 10:47 AM IST
வான் புகழ் வள்ளுவருக்கு வந்த சோதனை... சிலை மீது சாணி வீசி அவமானம்..!

சுருக்கம்

வள்ளுவரை யாரும் அவமதித்ததில்லை. ஆனால் தற்போது சாணி எறியப்பட்டிருக்கும் இந்நிகழ்வு பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாஜக வின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்ட திருவள்ளுவரின் படத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. காவி நிறத்தில் உடை அணிந்து ருத்ராட்சம் தரித்தபடி அந்த திருவள்ளுவரின் திரு உருவப்படம் இருந்தது.

பா.ஜ.க.,வின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்ட திருவள்ளுவரின் படத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. காவி நிறத்தில் உடை அணிந்து ருத்ராட்சம் தரித்தபடி அந்த திருவள்ளுவரின் திரு உருவப்படம் இருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருவள்ளுவரை முழுவதுமாக அவமதிக்கும் செயல் இது. பாஜக திட்டமிட்டு இதனைச் செய்வதாக நெட்டிசன்களும் அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், திருவள்ளுவர் ஒரு இந்து என்றும், திருக்குறள் இந்து மதத்தை அடிதழுவியே எழுதப்பட்டது என்றும் பாஜக தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் சாணி எறிந்து உள்ளனர்.

திருவள்ளுவரின் மீதும் திருக்குறள் மீதும் உலகெங்கும் மரியாதை உள்ளது. கருத்தியல் ரீதியாக வள்ளுவரைச் சொந்தம் கொண்டாடும் போட்டி உலகெங்கும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. எந்த போட்டியின் போதும் வள்ளுவரை யாரும் அவமதித்ததில்லை. ஆனால் தற்போது சாணி எறியப்பட்டிருக்கும் இந்நிகழ்வு பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!