தமிழகத்தில் எதிர்க்கட்சி யார்? அதிமுகவா? பாஜகவா? கனிமொழி சொன்ன பதில் என்ன தெரியுமா?

By vinoth kumarFirst Published Jan 26, 2022, 9:42 AM IST
Highlights

அரியலூர் பள்ளி மாணவி உயிரிழப்பை வைத்து பாஜக அரசியல் செய்து வருகிறது. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு நிற்கும் குடும்பத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய முனைவது உள்ளபடியே வருத்தத்திற்குரியது.

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பாஜகவினர் வேண்டும் என்றே அரசியல் செய்து வருகின்றனர் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி. இன்று பார்வையிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  மத்திய அரசின் பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமிக்கும் மசோதா குறித்து கேட்டதற்கு, மாநில அரசின் உரிமைகள் பறிக்கும் எதையுமே நாம் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மத்திய அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும், அதன் நோக்கம் மாநில உரிமைகளை பறிக்கக்கூடியதாகவே இருக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த போக்குக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

இப்போது எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக அவர்களை காப்பாற்றி கொள்வதிலேயே அக்கறை காட்டி கொள்கிறார்களே தவிர அவர்கள் ஆளும் கட்சியாகவும் இருந்த போதும் செயல்படவில்லை. அதனால், எதிர்க்கட்சியாகவும் செயல்படவில்லை என்றார். ஆனால், பாஜக எதிர்க்கட்சியாக செயல்படுதாக தான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகங்களில் வேண்டுமானால் பாஜகவை பற்றி பேசலாம், ஆனால் மக்கள் யாரும் பாஜகவை பொருட்படுத்தவே இல்லை என விமர்சித்தார். 

மேலும், அரியலூர் பள்ளி மாணவி உயிரிழப்பை வைத்து பாஜக அரசியல் செய்து வருகிறது. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு நிற்கும் குடும்பத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய முனைவது உள்ளபடியே வருத்தத்திற்குரியது கண்டனத்திற்குரியது என்றார்.

click me!