கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்..? தீவிர பரிசீலனையில் பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Jul 26, 2021, 12:51 PM IST
Highlights

பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவராகக் கருதப்படும் எடியூரப்பா, 2019ஆம் ஆண்டு முதல் முதலமைச்சராக பதவி வகிக்கிறார். வயது மூப்பை அடிப்படையாக வைத்து கட்சிக்குள் அவருக்கு எதிராக எழுந்த சர்ச்சையை சமாளிக்கும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவர் சந்தித்த நிலையில் அவர் தற்போது ராஜனமா அறிவித்துள்ளார். எடியூரப்பாவுக்கு 75 வயதாகும் நிலையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய ஒய்வு வழங்கப்படுவது பாஜகவின் விதியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது. பிற்பகல் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சராக இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்ய உள்ளார்

எடியூரப்பா கர்நாடகாத்தில் பாஜகவின் முகமாக இருந்து வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் தனியாளாக நின்று களம் கண்டு பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்தவர் அவர். முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ராஜினாமா அறிவித்துள்ளார். பாஜக மேலிடத்தின் உத்தரவின் பேரில் கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது. 76 வயதான எடியூரப்பா இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும் என ஏற்கனவே அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவராகக் கருதப்படும் எடியூரப்பா, 2019ஆம் ஆண்டு முதல் முதலமைச்சராக பதவி வகிக்கிறார். வயது மூப்பை அடிப்படையாக வைத்து கட்சிக்குள் அவருக்கு எதிராக எழுந்த சர்ச்சையை சமாளிக்கும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க கூடாது என அவர் சார்ந்த லிங்காயத்து சமூகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர், அவரை நேரில் சந்தித்த லிங்காயத்துக்கு மடாதிபதிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆயிரக்கணக்கில் திரண்டு கூட்டம் நடத்தி அவரை பதவி வலக கூடாது என வலியுறுத்தி வந்த நிலையில்  அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. அடுத்தும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில், 

பசவராஜ் பொம்மை : 

பசவராஜ் பொம்மை தற்போது கர்நாடகாவின் உள்துறை அமைச்சராக உள்ளார், மேலும் முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பாவின் நம்பிக்கைகுரியவர் பொம்மை முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார். பசவராஜ் பொம்மை 2008 ல் பாஜகவில் சேர்ந்தார், பின்னர் கட்சி அணிகளில் படிப்படியாக உயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். 

முருகேஷ் நிரானி :

தற்போது, ​​கர்நாடக அரசாங்கத்தில் சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஆவார். முருகேஷ் நிரானி லிங்காயத் பிரிவைச் சேர்ந்தவர், கர்நாடகத்தில்  லிங்காயத்துகளில் ஆதரவு கொண்டவர். கடந்த காலத்தில், அவர் மாநில தொழில்துறை அமைச்சராக இருந்தார், மேலும் அவர் ஒரு தொழிலதிபர் ஆவார். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக உள்ள இவர், 1990 களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அரவிந்த் பெல்லட் : 

அரவிந்த் பெல்லட் இரண்டு முறை எம்.எல்.ஏ மற்றும் நல்ல கல்வி பின்புலம் மற்றும் நேர்மையாளர் என்ற பிம்பமும் இருவருக்கு உள்ளது. பெல்லட் மூத்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரகாந்த் பெல்லாட்டின் மகன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவு அவருக்கு உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் கட்சியின் இளம், நவீன முகமாக அவர் கருதப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

சி.டி.ரவி

சி: டி.ரவி தற்போது பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக உள்ளார். அவர் சங்க பரிவாரின் செல்வாக்கு பெற்றவர் ஆவார். மேலும் பாஜகவின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷுடன் நெருக்கமாக உள்ளவர் ஆவார். கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் ரவி. அவர் கட்சியின் மீதும், இந்துத்துவத்தின் மீதும் தீவிர பின்பற்றுடையவர் என அறியப்படுகிறார். கட்சிப் பொறுப்பை ஏற்க அவர் சமீபத்தில் கர்நாடக அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்வர் ஆவார். 

சி.என்.அஸ்வத் நாராயண்: 

அஸ்வத் நாராயண் தற்போது கர்நாடக துணை முதல்வராக உள்ளார். தகுதி அடிப்படையில் ஒரு மருத்துவர், அஸ்வத் நாராயண் பாஜகவின் நவீன, நடுநிலை முகம். 2008 முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் இவர் பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். கட்சியின் இளம் மற்றும் நவீன முகம் என்ற தேவைகளை பூர்த்தி செய்ததால் அவரை பாஜக தலைமை துணை முதல்வராக நியமித்தது. 

சுனில் குமார்: ஓபிசி சமூகத்தை வைத்து பார்க்கும் போது சுனில் குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவர் தற்போது கர்நாடக அரசின் தலைமை கொறடா ஆவார்.  உடிபி மாவட்டத்தில் உள்ள கர்கலா தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக வென்றுள்ளார். கேரள பாஜகவின் பொறுப்பாளர் ஆவார்.  இந்துத்துவ அரசியலின் தீவிர பின்பற்றுபவர் என்றும் கூறப்படுகிறது. பஜ்ரங் தளம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் செல்வாக்கு பெற்றவர் ஆவார். 
 
 

click me!