சசிகலா குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மரணம்.. கொரோனாவில் இருந்து மீண்ட நெருங்கிய உறவினர் கருப்பு பூஞ்சைக்கு பலி

Published : Jul 26, 2021, 12:38 PM IST
சசிகலா குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மரணம்.. கொரோனாவில் இருந்து மீண்ட நெருங்கிய உறவினர் கருப்பு பூஞ்சைக்கு பலி

சுருக்கம்

சசிகலா ஏற்பாட்டின் பேரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு மாதத்திற்கு மேல் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார். 

கொரோனாவில் இருந்து மீண்டு கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட சசிகலா உறவினர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பெருக வாழ்ந்தான் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை  (60). கோட்டூர் தெற்கு ஒன்றிய அமமுக ஒன்றிய செயலாளர். கோட்டூர் ஒன்றியக்குழு தலைவராகவும்  இருந்து வந்தார். 

இவர், சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவியான இளவரசியின் உடன் பிறந்த சகோதரர் அண்ணாதுரை. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மே 15ம்தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர், ஒரு மாத சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்த மீண்ட அவருக்கு திடீரென அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனையடுத்து, மருத்துவமனைக்கு சென்று கருப்பு பூஞ்சை நோய்க்கான பரிசோதனை மெற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதியானது. இதையடுத்து சசிகலா ஏற்பாட்டின் பேரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு மாதத்திற்கு மேல் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!