Breakingnews: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா... கண்ணீர் பேட்டி..!

By Thiraviaraj RMFirst Published Jul 26, 2021, 12:17 PM IST
Highlights

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிகழ்ச்சியில் இதனை எடியூரப்பா அறிவித்தார்.  தனது ஆட்சிகாலம் முழுவதும் அக்னி பரீட்சையாக அமைந்து விட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பாஜக மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் ராஜினாம செய்யும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். தமது ஆட்சியின் 2ம் ஆண்டு நிறைவுற்றதை அடுத்து புத்தகம் ஒன்றை வெளியிட்ட நிகழச்சியின் இதனை எடியூரப்பா அறிவித்தார்.

கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறை முதல்வராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜ.க.,வில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனாலும் 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்வர் பதவியை பா.ஜ.க., மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்ப்பா பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் ராஜினாமா செய்துள்ளார்.

click me!