இனி தனியார் பள்ளிகளுக்கு நாமம்.. தட்டி தூக்கிய அரசுப்பள்ளிகள்.. அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 26, 2021, 11:34 AM IST
Highlights

இவற்றை வைத்து, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியே, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கியூஆர்' குறியீடுமாநில கருத்தாளர்களை வைத்து தேர்வு செய்யப்பட்ட, 432 மாவட்ட கருத்தாளர்களுக்கு இன்று முதல் 30ம் தேதி வரை, 5  நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் இந்த ஆண்டு 2,04,379 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, இணையதள வழி அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். 

ஹைடெக்' ஆய்வகங்கள், ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை, சிறந்த முறையில் மேற்கொள்ள, அடிப்படை கணினி கையாளுதல், இணையதளத்தை மேம்படுத்துதல், 'ஹைடெக்' ஆய்வகங்கள் ஆகியவற்றில், திறன் வளர் பயிற்சி அளிக்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு பயிற்சிக்கு தேவையான வீடியோக்கள், மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. 

இவற்றை வைத்து, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியே, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கியூஆர்' குறியீடுமாநில கருத்தாளர்களை வைத்து தேர்வு செய்யப்பட்ட, 432 மாவட்ட கருத்தாளர்களுக்கு இன்று முதல் 30ம் தேதி வரை, 5  நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக, மாவட்ட கருத்தாளர்களாக பயிற்சி எடுத்தவர்களை வைத்து, 2.10 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களில் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான அடிப்படை இணையவழி கணினி பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி மூலம் ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும், புத்தகத்தில் உள்ள, 'கியூஆர்' குறியீடுகளில் உள்ள எண்ம வளங்களை பயன்படுத்தி கற்பித்தல், இணையதளத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி, பாடக் கருத்துகளை எளிதாக விளக்குதல் போன்றவற்றில் திறனடைவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி வழங்க திட்டமிட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை நடத்தும் அளவிற்கு ஆசிரியர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்களா என்பதை ஆராய்ந்து பயிற்சி வழங்க வேண்டும் என்று முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதாகவும் கூறினார்.

மேலும், EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பாக குறிப்பை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் 2,04,379 மாணவர்கள் இந்த ஆண்டு சேர்ந்துள்ளதாகவும், தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு இந்த ஆண்டு 75,725 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆன்லைன் வகுப்பின் போது இணையதள கோளாறு மாணவர்களுக்கு ஏற்படுவது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், அதன் பின் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு தீர்வுக்காணப்படும் எனவும் தெரிவித்தார்.
 
 

click me!