கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை வலைத்த கோடம்பாக்கம் ஸ்ரீ.. இந்து மகா சபை பேரில் ஃபிராடு.. அறநிலைத்துறை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 26, 2021, 11:02 AM IST
Highlights

குறிப்பாக இந்து மகா சபை என்ற பெயரில் கட்சி நடத்திக் கொண்டு இந்து கோயிலுக்கு சொந்தமான இடத்தையே அபகரித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்து கோயில்களையும் இந்துக்களையும் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் இந்து சொத்துக்களை இப்படி ஆட்டயப்போடுபவர்களை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். 

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 1200 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு இடத்தை போலீஸ் பாதுகாப்போடு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும்  திருக்கோயில்களுக்கு சொந்தமான கணக்கில் வராத சொத்துக்கள் ஏராளமாக உள்ளன. அந்த சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்டு பாதுகாக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்து அத்துறையை கலைத்துவிட்டு இந்துக் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டுமென சமீபகாலமாக இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், 

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்பது, கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிப்பது, கோவில்களை சீரமைப்பது, புனரமைப்பது போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது. 

அங்கு ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் நிலத்தில், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர் சுமார் 1200 சதுர அடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பரபரப்பாக, பிரதான சாலையில் அந்த அடம் உள்ளதால் அதன் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தில்  உள்ள ஆக்கிரப்பை போலீஸ் பாதுகாப்போடு அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்ரீ என்கின்ற ஸ்ரீ கண்டன் என்பவர் மீது ஏற்கனவே ஆட்கடத்தல், கொலை மிரட்டல், பணமோசடி உள்ளிட்ட பல மோசடி வழக்குகள் உள்ளது. சமீபத்தில், திருமங்கலத்தில் தொழிலதிபரை ஒருவரை கடத்தி பணம் கேட்டுமிரட்டிய வழக்கு தொடர்பாக கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக இந்து மகா சபை என்ற பெயரில் கட்சி நடத்திக் கொண்டு இந்து கோயிலுக்கு சொந்தமான இடத்தையே அபகரித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்து கோயில்களையும் இந்துக்களையும் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் இந்து சொத்துக்களை இப்படி ஆட்டயப்போடுபவர்களை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். 
 

click me!