அவரு ரோட்டோர அமைச்சர்.. வரலாறு தெரியாது.. ஜெயக்குமாரை அலறவிட்ட அமைச்சர் நாசர்..!

Published : Jul 26, 2021, 10:33 AM ISTUpdated : Jul 26, 2021, 10:36 AM IST
அவரு ரோட்டோர அமைச்சர்.. வரலாறு தெரியாது.. ஜெயக்குமாரை அலறவிட்ட அமைச்சர் நாசர்..!

சுருக்கம்

ஜெயக்குமார் ரோட்டோர அமைச்சர். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை மட்டுமே பார்த்து அரசியலுக்கு வந்தவர். கொள்கை கோட்பாடு எதுவும் தெரியாது. அந்த அடிப்படையில் கட்சிக்கும் வரவில்லை. 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர் அவருக்கு வரலாறு தெரியாது என அமைச்சர் நாசர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியானது. இதில் திமுக தொடர்பாக பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக பசுபதி இந்த படத்தில் திமுக தொண்டராகவே வாழ்த்திருப்பார். இதில் அதிமுக குறித்தும், எம்.ஜி.ஆர். பற்றியும் அவதூறான கருத்துக்கள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “30 ஆண்டு கால நல்லாட்சியையே திட்டமிட்டு மறைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.சமீபத்தில் வெளியாகிய #சார்பட்டாபரம்பரை படத்தில் புரட்சித்தலைவர் #MGR க்கும் விளையாட்டு துறைக்கும் தொடர்பே இல்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் திமுகவின் பிரச்சாரப்படமாகவே உள்ளது” என விமர்சித்திருந்தார். 

இந்நிலையில்,  ஜெயக்குமார் விமர்சனத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதிலடி கொடுத்துள்ளார். ஜெயக்குமார் ரோட்டோர அமைச்சர். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை மட்டுமே பார்த்து அரசியலுக்கு வந்தவர். கொள்கை கோட்பாடு எதுவும் தெரியாது. அந்த அடிப்படையில் கட்சிக்கும் வரவில்லை. திமுக நீண்ட வரலாறு கொண்டது என்றும் திமுகவினர் வரலாறு தெரிந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி