வரும் 31 ஆம் தேதிக்குள் அவங்க மொத்தபேரையும் தூக்குங்க. இல்லன்னா நடக்கறதே வேறு.. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை.

Published : Jul 26, 2021, 09:29 AM IST
வரும் 31 ஆம் தேதிக்குள் அவங்க மொத்தபேரையும் தூக்குங்க. இல்லன்னா நடக்கறதே வேறு.. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை.

சுருக்கம்

ஜூலை 31ம் தேதிக்கு பின், போக்குவரத்து மேலாளர், ஆய்வாளர், பரிசோதகர், ஓட்டுநர் பயிற்சியாளர், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் போன்றவர்கள் பணியமர்த்தி உள்ளது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

ஓய்வுப்பெற்ற போக்குவரத்து பணியாளர்களை வரும் 31ம் தேதிக்கு பின் தற்காலிக பணியில் ஈடுபடுத்தக்கூடாது என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.ஓய்வு பெற்ற பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தி, security, guard, time keeper மற்றும் தலைமையகத்தில் மருத்துவ உதவியாளர் பணி செய்வதற்கு அனுமதி பெறப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை பணியாளர்களை எந்த பணியிலும் பணியமர்த்தக்கூடாது என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜூலை 31ம் தேதிக்கு பின், போக்குவரத்து மேலாளர், ஆய்வாளர், பரிசோதகர், ஓட்டுநர் பயிற்சியாளர், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் போன்றவர்கள் பணியமர்த்தி உள்ளது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேப்போல், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களை பணி அமர்த்தவில்லை என பொது மேலாளருக்கு அறிக்கை அனுப்ப, அனைத்து மண்டல மேலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு போக்குவரத்துத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி