இதுக்கு பேருதான் தில்லு. துபாயில் இருந்து வந்த விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த பயணிகள், சென்னையில் கைது.

By Ezhilarasan BabuFirst Published Jul 26, 2021, 9:09 AM IST
Highlights

அப்போது அந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். வீட்டு உபயோக பொருட்களான அரிசி குக்கர், ஜுசர், மிக்சி போன்ற பொருட்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது மோட்டார்களில் தங்கத்தை வளையங்கள் போல் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா். 

துபாயில் இருந்து சென்னைக்கு வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடியே 3 லட்சத்தி மதிப்புடைய 8 கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தங்கம் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், தங்கம் வாங்குவது நடுத்தர மக்களுக்கு பெரும் கனவாக மாறியுள்ளது.  இதனால் தங்கத்தின் மீதான மதிப்பு, மோகம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையில் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது, 

கடல்  மார்க்கமாகவும்,  விமானம் மூலமாகவும் தங்கக் கடத்தல் நடைபெறுகிறது. இப்படி கடத்தலில் ஈடுபடுவோரை கண்காணித்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது,  நேற்று சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். வீட்டு உபயோக பொருட்களான அரிசி குக்கர், ஜுசர், மிக்சி போன்ற பொருட்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது மோட்டார்களில் தங்கத்தை வளையங்கள் போல் மறைத்து  வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா். ரூ. 4 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 170 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

 

click me!