
அண்ணே ஒரு சந்தேகம்..! நாஞ்சில் சம்பத் வச்சிருந்த காரை இப்ப யார் வச்சிருக்கா...?
நாஞ்சில் சம்பத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை, திரும்ப ஒப்படைக்குமாறு அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு, மதிமுக கட்சியில் இருந்து விலகி வந்து அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார் ஜெயலலிதா. அதற்காக அவருக்கு இன்னோவா காரை பரிசளிக்கப்பட்டது.
ஜெ மறைவிற்கு பின்னர்....
ஜெ மறைவிற்கு பின், சசிகலாவை தலைமை ஏற்க கட்சி நிர்வாகிகள் அழைத்த போது, அதற்கு எதிர்பு தெரிவித்தால், இன்னோவா காரை சசிகலாவிடம் ஒப்படைத்தார் நாஞ்சில்.பின்னர் சமரச பேச்சுக்கு உடன்பட்ட நாஞ்சிலுக்கு மீண்டும் கிடைத்தது இன்னோவா...
தினகரனுக்கு அதரவு
பன்னீர் மற்றும் எடப்பாடி அணியினர் இணைந்து விட்ட காரணத்தினால்,தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வருகிறார் நாஞ்சில் சம்பத்.இதன் காரணமாக கொள்கை பரப்பு செயலாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இன்னோவா காரை, திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை அதிமுக தலைமை கழகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்.
யார் பெயரில் பதியப்பட்டது..
இதையடுத்து தற்போது அந்த இன்னோவா கார், கழகத்தின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் கடைசியில், இன்னோவா காரை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.