தமிழக கவர்னரின் அடுத்த இலக்கு ‘போலி டாக்டர்கள்’ டீமா?

First Published Jan 17, 2018, 5:30 PM IST
Highlights
Tamil Nadu Governor Purohit proved to be a multi-dynamic parashanalty.


தமிழக கவர்னர் புரோஹித் தானொரு மல்டி டைனமிக் பர்ஷனாலிட்டி என்பதை நறுக்கென நிரூபித்திருக்கிறார். 


சென்னையில் குளோபல் மருத்துவமனையின் விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பக்கேற்றார். இதில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால்...”நாம் உண்ணும் உணவில் இருக்கும் நச்சுத்தன்மை மிக்க பொருட்களை நீக்கும் முக்கிய பணியை, கல்லீரல் செய்கிறது. கொழுப்புச் சத்து பொருட்களை உண்மபதால், அது, பெரிதும் பாதிக்கப்படுகிறது.


இதேபோல் ‘ஆன்டிபயாடிக்’ எனும் நோய் எதிர்ப்பு மருந்துக்களை அதிகம் உட்கொள்வதாலும், கல்லீரல் பாதிக்கிறது. உடல் நலம் குறி டாக்டர்களிடம் போனால், அவர்களில் சிலர் அளவுக்கு அதிகமாக ஆண்டிபயாடிக் மருந்து எழுதித் தருகின்றனர்


எனவே நோயாளிகளுக்கு குறிப்பாக சிறுவயதினருக்கு குறைந்த அளவு ஆண்டிபயாடிக் மருந்துக்களை மட்டுமே டாக்டர்கள் எழுதித் தர வேண்டும். அதேபோல் உடல்நிலை மோசமானால் மக்களும், நல்ல தகுதி வாய்ந்த டாட்கரிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும்.” என்று நெத்தியடியாக பேசியுள்ளார். 


ஏற்கனவே கவர்னர், தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகத்தின் செயல்பாடுகள் பற்றி ரிப்போர்ட் தயார் செய்து அதை பிரதமரிடம் கொடுத்திருக்கிறார்.

எப்போது என்ன நடவடிக்கை பாயுமோ? என்று தமிழக அமைச்சரவை கிலியில் இருக்கிறது. 
இந்நிலையில் ’நல்ல தகுதி வாய்ந்த டாக்டர்களிடம் மட்டுமே மக்கள் சிகிச்சை பெற வேண்டும்.’ என்று சொல்லியிருப்பதன் மூலம், அடுத்து போலி டாக்டர்கள் விவகாரத்தை, மற்றும் தத்துப்பித்தென வைத்தியம் செய்யும் டாக்டர்கள் லிஸ்டை கவர்னர் கையில் எடுப்பாரோ என்று மிரண்டு கிடக்கிறது மருத்துவ வட்டாரம்!
 

click me!