ஜனாதிபதி  தேர்தலில் பாஜக வேட்பாளர் யார்...? – வெங்கையா நாயுடு பரபரப்பு பேட்டி...

 
Published : Jun 18, 2017, 01:52 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
ஜனாதிபதி  தேர்தலில் பாஜக வேட்பாளர் யார்...? – வெங்கையா நாயுடு பரபரப்பு பேட்டி...

சுருக்கம்

who is a next president of india candidate in make bjp team before june 23rd

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் யார் என்பது குறித்து ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்படுவார் என மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய பாஜக தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக தரப்பில் அமைக்கப்பட்ட ராஜ்நாத்சிங், வெங்கையாநாயுடு, அருண்ஜெட்லி ஆகிய 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் பல முறை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமா், காந்தியின் பேரன் கோபால்காந்தி ஆகியோர் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் களமிறக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் யார் என்பது குறித்து ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்படுவார் என மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!