
தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு பாஜக பலம் மபெரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 3 மாதத்தில் தமிழகமே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு பாஜக பலம் பெற்று விளங்கும் என்றார்.
அந்த பலம் நேரடியாக இருக்கும் தவிர மறைமுகமாக பலத்தை நிரூபிக்க மாட்டோம் என்றார். பிற கட்சியை சார்ந்து பலத்தை காட்டவேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றும் கூறினார்.
திமுக ஒரு வீடியோவை வைத்துக் கொண்டு தினமும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறது. திமுகவே ஊழல் மற்றும் முறைகேடுகள் செய்துள்ளது. ஊழலை பற்றி பேச திமுகவுக்கு உரிமை இல்லை என்றார்.
சென்னையில், போதைப்பொருள் பிடிபட்டு வருகிறது. போதை நகரமாகியுள்ளது சென்னை. போதை சாக்லேட் சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். அதனை தடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்போது அவர் குற்றம் சாட்டினார்.
சென்னை புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி தூக்கி வீசப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.