பால்வாடிகள் தான்... அவர்களை இயக்கியது யார்..? முரண்டு பிடிக்கும் பாஜக... நடவடிக்கை பாய்வது உறுதி..?

By Thiraviaraj RMFirst Published Jan 17, 2022, 12:59 PM IST
Highlights

இந்தக் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தம்கூட தெரியாது. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் குழந்தைகளிடம் இதை கொண்டு சென்றிருக்கிறார்கள். 


தனியார் தொலைக்காட்சி நிழச்சியில் சிறார்கள் கல்ந்து கொண்ட மாறுவேடமணிந்து நடந்த போட்டியில், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப்பயணம், பணமதிப்பிழப்பீடு நடவடிக்கை உள்ளிட்டவை விமர்சனத்துக்குள்ளானதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். குறிப்பிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சிறுவர்கள் நிகழ்ச்சி தானே நகைச்சுவையாக கடந்து சென்று விடலாம் என்று ஒரு தரப்பினரும், 10 வயது சிறுவர்களை வைத்து நிகழ்ச்சி எடுத்திருக்கிறார்கள். அந்த சிறார்களுக்கு எப்படி தெரியும் அரசியல். அவர்களை வைத்து விமர்சித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசியல் உள்நோக்கத்துடன் நிகழ்ச்சியை தயாரித்துள்ளது. ஆகவே அந்த தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுப்பதே சரியான முடிவு எனவும் பலரும் மோதல் போக்கை தொடர்ந்து வருகின்றனர். 

இது தொடர்பாக,  பாஜக தரப்பில் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அந்த தனியார் தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், 'பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. அவர்களை வைத்து அரசியல் நோக்கத்துக்காக இப்படி நிகழ்ச்சி நடத்துவதையும் கண்டிக்கிறோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார். ''உங்கள் தொலைக்காட்சியில் சிறுவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். அதில் நடிகை சினேகா, நடிகர் செந்தில் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். கடந்த 15ம் தேதி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், பிரதமர் நரேந்திரமோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

 கருப்பு பணம் ஒழிப்பு குறித்தும், பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்வது குறித்தும் அவதூறாக பேசி இருக்கிறார்கள். அதுவும் பத்து வயது குழந்தைகளை வைத்து இதை பேசி இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தம்கூட தெரியாது. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் குழந்தைகளிடம் இதை கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நடுவர்கள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், அதை ஊக்குவிக்கும் வகையிலேயே செயல்பட்டனர். நாடு முழுதும் தவறான செய்தியைக் கொண்டு செல்கிறது இது. தவறான செய்திகள் பரவாமல் இருக்க தொலைக்காட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 குழந்தைகளுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதைத்தான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பும் தொலைக்காட்சிதான். இதற்கு தொலைக்காட்சித்தரப்பு, இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. அவர்களை வைத்து அரசியல் நோக்கத்துக்காக இப்படி நிகழ்ச்சி நடத்துவதையும் கண்டிக்கிறோம்' என்று நிர்மல் குமார் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்ணாமலை அவர்களே… தனிநபர் விமர்சன அரசியலை செய்வதே பாஜகவினர் தான்… ராகுல் காந்தி அவர்களை பப்பு என்று கேலி செய்தபோது ஏன் கோபம் வரவில்லை… அவ்வாறு கேலி செய்தவர் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது???

— Arun Kumar Mahalingam (@Arunkm1980)

 

இந்நிலையில் இந்த விவகாரத்தை மையமாக வைத்து, பால்வாடி_பாஜக என்கிற ஹேஷ்டேக்கை எதிர்த்தரப்பினர் ட்ரெண்டாக்கி வருகின்னர். 

7 வருஷ ஆட்சியை 7 நிமிஷத்துல முடிச்சிட்டாங்கலே.... pic.twitter.com/LkQOGDHSyB

— KOVAI JAFER (@kovai_jafer)

 

click me!