மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டியா..? திமுகவை டாராக கிழிக்கும் தங்கமணி..

By Raghupati RFirst Published Jan 17, 2022, 12:26 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து பாய்ந்து வரும் ரெய்டுகளில் கடைசியாக சிக்கியவர் கொங்கு மண்டலத்தில் கோலோச்சி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி.

இந்த சோதனையை முன்கூட்டியே அறிந்தவர் போல ரெய்டை கூலாகவே எதிர்கொண்டார் தங்கமணி. தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டாலும், பெரிய அளவில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. ஆனால், கிரிப்டோகரன்சியில் அவர் முதலீடு செய்திருப்பதாக வெளியான தகவல் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. இந்த ரெய்டுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த அழுத்தமே காரணம் என்று செய்தியாளர் சந்திப்பின் போது வெளிப்படையாகவே தங்கமணியும் சுட்டிக்காட்டினார்.

கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும், கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும் என்று போட்டு தாக்கி தாக்கினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.இவ்வாறாக இருவருக்கும் இடையே உரசல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில்  முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்த போது, ‘அம்மாவின் அரசு வீடுகளுக்கு வழங்கிய 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் மின் கட்டணத்திற்கு GST வரி விதித்துள்ளனர். 

திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு அதிமுக ஆட்சியில் ரூ 2 கோடி ஒதுக்கிய நிலையில் ஏதோ தங்கள் ஆட்சியில் செய்வது போல் தவறாக பரப்பிவருகிறார்கள் டாஸ்மாக் கடை பார்களை மாவட்டத்திற்கு ஒருவருக்கு என கொடுத்து திமுகவினரே எங்களிடம் புகார் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர் மதுகடைகளை குறைப்போம் என்றவர்கள் இதுவரை மதுகடைகள் இல்லாத இடங்களில் கூட கடைகளை திறந்து வருகின்றனர்’ என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

click me!