உதய நிதியை யார் என்று கேட்ட பள்ளி மாணவி.. கலைஞருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.. நிகழ்ச்சியில் சம்பவம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 4, 2022, 9:06 PM IST
Highlights

பள்ளி மாணவி ஒருவர் கலைஞருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என உதயநிதியிடம் கேட்டதாகவும், அதைக் கேட்டுத்தான்  ஒரு நிமிடம் ஆடிப் போனதாகவும், உதயநிதி ஸ்டாலின்  மேடையில் பகிர்ந்துள்ளார்.

பள்ளி மாணவி ஒருவர் கலைஞருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என உதயநிதியிடம் கேட்டதாகவும், அதைக் கேட்டுத்தான்  ஒரு நிமிடம் ஆடிப் போனதாகவும், உதயநிதி ஸ்டாலின்  மேடையில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமின்றி தன்னை நீங்கள் யாரென்று அந்த மாணவி கேட்டதாகவும் அந்த மாணவியின் தைரியத்தைப் பாராட்டுகிறேன் என்றும் அவர் கூறினார்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் ஐந்து மாநகராட்சி பள்ளிகளில் இந்தியாவிலேயே முதல்முறையாக மெட்டாவர்ஸ்  எனப்படும் பகிர்ந்துகொள்ளும் 3d மெய்நிகர் ஆய்வக மெட்டா கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தொடக்க விழா இன்று சென்னை  திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி கலை அரங்கத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்: கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு

அதில் 360 டிகிரி சுற்றளவில் காட்சிகளை காணும் வகையில் மெய்நிகர் சூழலில் வி.ஆர் லென்ஸ் கருவி மூலம் பார்க்கக் கூடிய கல்வி முறையினை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மேடையில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் என்னை சிறப்பு விருந்தினர் என குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் நான் சிறப்பு விருந்தினர் அல்ல, மாணவ மாணவிகள் தான் சிறப்பு விருந்தினர்கள்.

இதையும் படியுங்கள்: பாஜக போன்ற மத வெறியர்களுக்கு இந்த தீர்ப்பு செருப்படி..பாஜவை விளாசித் தள்ளிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மிகவும் கொடுத்து வைத்த தொகுதி என்று கூறிகிறார்கள் , ஆனால் உண்மையிலேயே நான்தான் கொடுத்து வைத்திருக்கிறேன். இந்த தொகுதி மக்கள் என் மீது அன்பும் பாசமும் பொழிகிறார்கள், மேடையில் என்னுடன் அமர்ந்திருந்த மாணவிகளிடம் அவர்கள் குறித்து விசாரித்தேன், அப்போது என் அருகில் அமர்ந்திருந்த மாணவி நீங்கள் யார் என்று என்னை கேட்டார். நான் உதயநிதி என்று கூறினேன், அப்படி என்றால் உங்களுக்கும்  கலைஞருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார், உடனே நான் ஆடிப்போய்விட்டேன், நான் கலைஞரின் பேரன் என்று கூறினேன்.

கலைஞர் அவர்களின் பேரனான நீங்கள் என்று தைரியமாக என்னிடம் கேட்டார். தற்போதைய சூழலில் பெண்கள் இந்த அளவிற்கு தைரியமாக கேட்பது, பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் அமர்ந்துள்ள மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அந்த கருவியை மாட்டினேன் அப்போது 25 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக எனக்கு தயாநிதி மாறன் அவர்கள் கணினி வாங்கிக் கொடுத்ததுதான் ஞாபகம் வந்தது. அதேபோல் ஒரு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்து வருகிறார்.

தற்போது முதல்முறையாக சென்னையில் இரண்டு மாநகராட்சி பள்ளிகள் மற்றும் 3 அரசு பள்ளிகள் என ஐந்து பள்ளிகளில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது உண்மையிலேயே மாணவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும், தமிழகம் முழுவதும் இந்த திட்டம் கொண்டுவரப்பட வேண்டும், அறிஞர் அண்ணா கலைஞர் சொன்னதுபோல தரமான கல்வியை முதல்வர் மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதை நாங்கள் நிச்சயம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!