பொன்முடி மகனுக்கு கல்தா..! கே.என் நேரு மகனுக்கு ஜாக்பாட்- திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்பிக்கள் யார் .?

By Ajmal Khan  |  First Published Mar 20, 2024, 11:57 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்பிக்கள் 9 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தஞ்சை எம்பி பழனிமாணிக்கம், கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 


திமுக வேட்பாளர்கள் யார்.?

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. இந்தநிலையில்  திமுக சார்பாக போட்டியிடவுள்ள 21 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த வகையில், 1,தூத்துக்குடி- கனிமொழி, 2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார். 3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி, 4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், 5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,  7,காஞ்சீபுரம் - ஜி.செல்வம், 8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை  

Tap to resize

Latest Videos

10,தர்மபுரி- ஆ.மணி 11,ஆரணி-தரணிவேந்தன் 12,வேலூர்- கதிர் ஆனந்த், 13,கள்ளக்குறிச்சி- மலையரசன், 14,சேலம்-செல்வகணபதி, 15,கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார். 16,பெரம்பலூர் - அருண் நேரு 17,நீலகிரி - ஆ.ராசா, 18,பொள்ளாச்சி-  ஈஸ்வரசாமி, 19,தஞ்சாவூர் - முரசொலி 20,ஈரோடு-பிரகாஷ் 21,தேனி- தங்க தமிழ்செல்வன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்பிக்கள் யார்.?

இதனிடையே கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, சேலம் எஸ் ஆர் பார்த்திபன், பொள்ளாச்சி சண்முகம் சுந்தரம், திண்டுக்கல் வேலுச்சாமி,  மயிலாடுதுறை ராமலிங்கம், தஞ்சாவூர் பழனி மாணிக்கம், தென்காசி தனுஷ் எம் குமார், திருநெல்வேலி ஞான திரவியம், தர்மபுரி- செந்தில் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதில் 9 முன்னாள் எம்பிக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் முக்கியமாக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

 

வாய்ப்பு மறுக்கப்பட்ட காரணம் என்ன.?

கவுதம சிகாமணி மீதுள்ள வழக்குகள் மற்றும் தொகுதியில் அவரது செயல்பாடுகள் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் செந்தில் குமாருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஒரு சில தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட காரணமாக நடப்பு எம்பிக்களுக்கு கொடுக்கவில்லை. அதே நேரத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவிற்கு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

DMK Candidate List திமுக வேட்பாளர்கள் பட்டியல்: யார் யார் எங்கு? புதியவர்களுக்கு வாய்ப்பு; முழுவிவரம் இங்கே!!

click me!