DMK Candidate List 2024 : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், திமுக சார்பாக போட்டியிடவுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உடன்பாடு
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக கூட்டணி தயாராகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுவை மற்றும் தமிழகத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதியும், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது. இந்தநிலையில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள 21 வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இவர்கள் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர்கள். pic.twitter.com/A7Du7BQEDQ
திமுக வேட்பாளர்கள் யார்.?
மத்திய சென்னை தயாநிதிமாறன், வடசென்னை கலாநிதி வீராசாமி ,தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன், வேலூர் கதிர் ஆன்ந்த், அரக்கோணம் ஜெகத்ரட்சகன்,ஸ்ரீபெரும்புதூர் டி ஆர் பாலு,தருமபுரி ஆ மணி,கோவை கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி ஈஸ்வர சாமி, ஈரோடு பிரகாஷ், நீலகிரி ஆ ராசா, தஞ்சாவூர் முரசொலி, பெரம்பலூர் அருண் நேரு, தேனி தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி, தென்காசி ராணி ஸ்ரீகுமார், கள்ளக்குறிச்சி மலையரசன்,சேலம் செல்வகணபதி, திருவண்ணாமலை அண்ணாதுரை, காஞ்சிபுரம் செல்வம், ஆரணி தரணிவேந்தன், ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்முடி மகன் கவுதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது, அமைச்சர் கே.என் நேரு மகன் அருண் நேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது .
யார் இந்த திமுக வேட்பாளர்கள் .?
திமுக வேட்பாளர் பட்டியலில் 50%க்கு மேல் புதியவர்கள் 11 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும் 3 பெண் வேட்பாளர்களும், முனைவர்கள் 2 பேர், மருத்துவர்கள் 2 பேர், பட்டதாரிகள் 19 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
தேமுதிக,புதிய தமிழகம், எஸ்டிபிஐக்கு தொகுதியை ஒதுக்கிய அதிமுக.? எத்தனை இடம் .? எந்த தொகுதி தெரியுமா.?