ஜெயலலிதா முதல் பொன்முடி வரை... தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் யார்.? யார்.? பட்டியல் இதோ

By Ajmal KhanFirst Published Dec 21, 2023, 10:59 AM IST
Highlights

குற்ற சம்பவங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்க நேரிடும் அந்த வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு இதுவரை பதவி இழந்தவர்கள் யார் என்ற பட்டியலை தற்போது பார்க்கலாம்..
 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ- எம்பிக்கள்

மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்  நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் கடந்த 2013 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாஜகவை சேர்ந்த சுரேஷ் கணபதி மின்சார திருட்டு வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்றதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பப்பு கலானி கொலை வழக்கில் தண்டனை பெற்றதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Latest Videos

பதவியை இழந்த லாலு பிரசாத்

லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டனை பெற்றதையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதே போல சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றது தொடர்ந்து திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி பதவி விலகினார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதையடுத்து சிவசேனா கட்சியை சேர்ந்த பவன்ராவ் கோலப் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து  தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கொலை மற்றும் குண்டர் சட்டத்தில் தீர்ப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல் கொலை வழக்கில் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அப்சல் அன்சாரி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  குண்டர் சட்டத்தில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து 2023 ஆம் ஆண்டு மே மாதம் எம்பி பதவியை இழந்தார்.  சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அப்துல்லா ஆசாம் கான் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசம்கான்,  நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பாஜகவை சேர்ந்த விக்ரம் சிங் சைனி இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றது அடுத்து சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஜெயலலிதா, பாலகிருஷ்ண ரெட்டி தகுதி நீக்கம்

இதேபோல சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  கைது நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே அவர் மரணம் அடைந்தார். மேலும் தமிழகத்தை சேர்ந்த அப்போதைய அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலவர வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்றதையடுத்து எம்எல்ஏ பதவியை இழந்ததால் அமைச்சர் பதவியில் இருந்தும் விலகினார்.

இதையும் படியுங்கள்

Ponmudi Case : தேசிய கொடி இல்லாத காரில் பொன்முடி..! உச்சகட்ட பாதுகாப்பில் உயர்நீதிமன்றம்

click me!