உள்ளாட்சித் தேர்தலில் உதட்டில் வெல்லம் உள்ளத்தில் கள்ளம்... திமுக மீது சவுக்கடி விமர்சனம்..!

By Thiraviaraj RMFirst Published Oct 10, 2019, 12:13 PM IST
Highlights

திமுகவின் உள்ளும் புறமுமான வெளிவேஷமும் பகல் வேஷமும் என்றிருக்க இப்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை வாங்கியவர்களே ஆட்சிக்கு வந்தால் உள்ளட்சித் தேர்தலை உடனே நடத்துவோம் என்கிறார்கள் என நமது அம்மா நாளிதழ் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளது. 

நமது அம்மா நாளிதழில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில், ‘திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்கிறார் ஸ்டாலின். உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கியது திமுக தான். மொத்தமுள்ள வார்டுகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும் என காரணம் காட்டி நீதிமன்றத்தை நாடி தடைபெற்றது திமுக. சென்னை, கோவை, மதுரை, நெல்லை போன்ற புறநகரங்களில் சாதிவாரியாக மக்கள் வாழ்வதை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுப்பது என்பது மிகக் கடினமான காரியம் என்று தெரிந்தும் அன்றைய அரசியல் சூழ்நிலையில் திமுகவால் வெற்றி பெற முடியாது என்பதை கருத்தில் கொண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை பெற்றவர்கள் இப்பொழுது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவோம் என்கிறார்கள். இது தான் திமுகவின் வழக்கமான இரட்டை வேடம். 

இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, பொங்களுக்கு வேஷ்டி, சேலை வழங்குவதை எதிர்க்கவில்லை என்று ஒரு பக்கம் ஆதரவு தங்கள் கட்சியின் வழக்கறிஞர் ஒருவரை ஏவி விட்டு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்குப்போட வைத்தது. தொடர்ந்து பருவமழை பொய்த்த நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக முதலமைச்சர் எடப்பாடியார் உத்தரவிட்டபோது அதனை ஆதரிப்பதாக ஒரு பக்கம் வெளிவேஷம் போட்டுவிட்டு அதற்கும் தடை கேட்டு தங்கள் கட்சி வழக்கறிஞர்களை விட்டு நீதிமன்றத்தை நாடியது திமுக தான். 

ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்கு எதிராக போர்குற்ற விசாரிப்பும் பொருளாதார தடையும் இலங்கைக்கு எதிராக வேண்டும் என்கிற தீர்மானத்தை கழக அரசு புனிதமிக்க சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை கொண்டு வந்தபோது அதனை ஆதரித்து வாக்களித்தது திமுக என்றால் அடுத்த சில மாதத்திலேயே சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் மூலம் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாயை இன அழைப்பு நடந்த இலங்கையில் தங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்யவே, அதனை கண்டும் காணாமல் இருந்ததும் சாட்சாத் திமுக தான். 


இதுதான் திமுகவின் உள்ளும் புறமுமான வெளிவேஷமும் பகல் வேஷமும் என்றிருக்க இப்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை வாங்கியவர்களே ஆட்சிக்கு வந்தால் உள்ளட்சித் தேர்தலை உடனே நடத்துவோம் என்கிறார்கள் என்றால் இதனை எல்லாம் அறியாதவர்கள் அல்லவே மக்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!