நம்பி வந்தவர்களை கைவிடாத ஸ்டாலின்! நெகிழ்ந்து கண்கலங்கும் காங்கிரஸ்...

By sathish kFirst Published Oct 10, 2019, 11:12 AM IST
Highlights

ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை கூடவே வைத்துக் கொண்டதும், அவரை ராணுவ வீரர் என்று உயர்வாக பேசியதையும், நம்பி வந்த காங்கிரசை கைவிடாமல் தூக்கி விடுவதையும் பார்த்த மக்கள் மட்டுமல்ல காங்கிரஸ்கார்களும் வெகுவாக ரசித்தனர். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதால், நாங்குநேரி தொகுதியில், திமுகவினரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், தளபதி பேரில் மட்டுமல்ல உண்மையாகவே தான் ஒரு தலைவன் என்பதையும் நம்பி வந்தவர்களை கைவிடாத குணம் கொண்டவர் என்பது கடந்த சில நாட்களாக நான்குனேரியில் பார்க்கும் காங்கிரஸ் காரர்கள் மட்டுமல்ல, விசிக, மதிமுக ஏன் அதிமுகவினரையே யோசிக்கவைத்துவிட்டார். 

பொதுவாகவே தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு சம்பிரதாயத்துக்கு வாக்கு கேட்பது அரசியலில் வழக்கமான ஒன்று தான் ஆனால் ஸ்டாலின் அப்படியல்ல, காலத்தில் தனது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளையும் இறக்கிவிட்டு வேலை பார்க்க்க வைத்துள்ளார்.  ஐ.பெரியசாமி தலைமையில், ஒரு குழுவே கொடுத்ததுமட்டுமல்லாமல், தொடர்ந்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது, காங்கிரஸ் கட்சியை நெகிழச் செய்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக, நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக, திண்ணை பிரச்சாரம், நடை பயிற்சி பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் என ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்தார். ஸ்டாலின் வருகைக்கு பின்னர், காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை பல மடங்கு கூடி இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரத்தின் போது, வேட்பாளர் மனோகரனை கூடவே வைத்துக் கொண்டதும், அவரை ராணுவ வீரர் என்று உயர்வாக பேசியதையும் மக்கள் வெகுவாக ரசித்தனர்.

நாங்குநேரியில் வெற்றிபெறுவது குறித்து, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், நீங்கள் அனைவரும் ஒவ்வொரு பகுதியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள், நான் வேறு பகுதிக்கு செல்கிறேன் என்று வேட்பாளரை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றார். ஸ்டாலின் பிரச்சாரம் செய்த இடங்களிலும், பேசிய பொதுக்கூட்டங்களிலும் தொண்டர்கள் உற்சாகம் மிகுந்து காணப்பட்டனர். இது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

பணப்பொறுப்பு முதல் தொகுதியின் மொத்த தேர்தல் சம்பந்தமான அனைத்தையும் ஐ.பெரியசாமி வசம் ஒப்படைத்துவிட்ட ஸ்டாலின், காங்கிரஸ் வெற்றி என்பது என்னுடைய வெற்றி போல அதனால எந்த நிலையிலும் தளராமல் வேலையைப் பாருங்க என்று காங்கிரஸ் சொல்லியிருக்கிறார். விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை விட்டுட்டு நாங்குநேரிக்கு எத்தனை நாள் ஒதுக்குவாரோ?  என்று உண்மையிலேயே சந்தேகப்பட்டோம். ஆனால், முதலில் இரு நாட்கள், பிறகு இரு நாட்கள் என மொத்தம் 4 நாட்கள் ஒதுக்கிவிட்டார். அதுவும் காங்கிரஸ் வேட்பாளரை முன்னிலைப்படுத்தி ஸ்டாலின் வாக்கு சேகரித்த விதம் காங்கிரசை நெகிழ்ந்து கலங்க வைத்துள்ளதாம். 

click me!