எடப்பாடியின் இருவர் அணி மூவர் அணியாக மாறியது..! கிடுகிடுவென முன்னேறும் உடுமலையார்..!

Published : Oct 10, 2019, 10:38 AM ISTUpdated : Oct 10, 2019, 10:39 AM IST
எடப்பாடியின் இருவர் அணி மூவர் அணியாக மாறியது..! கிடுகிடுவென முன்னேறும் உடுமலையார்..!

சுருக்கம்

அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி.வேலுமணி.. இவர்கள் இருவர் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு கரங்கள் போன்றவர்கள். தமிழக அரசியல் சூழல் ஆக இருந்தாலும் சரி டெல்லி அரசியல் நெருக்கடியாக இருந்தாலும் சரி சமாளித்து ஆட்சி சுமூகமாக செல்வதற்கு தங்கமணி மற்றும் வேலுமணி மிக முக்கிய காரணம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்கு உரிய அமைச்சர்கள் பட்டியலில் உடுமலை ராதாகிருஷ்ணன் கிடுகிடுவென 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி.வேலுமணி.. இவர்கள் இருவர் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு கரங்கள் போன்றவர்கள். தமிழக அரசியல் சூழல் ஆக இருந்தாலும் சரி டெல்லி அரசியல் நெருக்கடியாக இருந்தாலும் சரி சமாளித்து ஆட்சி சுமூகமாக செல்வதற்கு தங்கமணி மற்றும் வேலுமணி மிக முக்கிய காரணம். 

இவர்கள் இருவர் தவிர அமைச்சர் ஜெயக்குமாரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அரசு தொடர்பான விவகாரங்களை தீர்க்க மட்டும் இவரை முதலமைச்சர் பயன்படுத்தி வருகிறார். கட்சி விவகாரங்களில் ஜெயக்குமாரை தலையிட முதலமைச்சர் அனுமதிப்பது இல்லை. எனவே கட்சி மற்றும் அரசியல் விவகாரங்களில் முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருப்பவர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்த இவரை அண்மையில் தான் தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் தலைவராக நியமித்தார் எடப்பாடியார்.

தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேசன் நிறுவனம் தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு பிறகு அதிக காசு புழங்கும் ஒரு அமைப்பு. அதோடு மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளையும், செய்தி தொலைக்காட்சிகளையும் கூட கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த அளவிற்கு மிக முக்கியமான ஒரு அமைப்பிற்கு உடுமலை ராதாகிருஷ்ணனை தலைவராக எடப்பாடி நியமிக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

உடுமலை ராதாகிருஷ்ணன் அரசு கேபிள் டிவி தலைவரான உடனேயே அத்துறைக்கான அமைச்சர் மணிகண்டனுடன் மோதல் ஏற்பட்டது. உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்தி வரும் அட்சயா கேபிள்ஸ் தொடர்பாக அமைச்சர் மணிகண்டன் வெளியிட்ட தகவல் உடுமலைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அன்றைய தினமே மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

எடப்பாடி முதலமைச்சரான பிறகு பதவி பறிக்கப்பட்ட ஒரே அமைச்சர் மணிகண்டன் தான். அதுவும் உடுமலையுடன் மோதியதால் ஏற்பட்ட விளைவு தான் இது. அந்த அளவிற்கு உடுமலை முதலமைச்சருடன் நெருங்கியிருந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் பொறுப்புகளை அமைச்சர் சி.வி. சண்முகம் கவனித்து வந்தார். ஆனால் அவர் மகன் போல் வளர்த்து வந்த தங்கை மகன் லோகேஸ் தற்கொலையை தொடர்ந்து சி.வி. சண்முகம் தளர்ந்துவிட்டார்.

இதனால் விக்கிரவாண்டி தேர்தல் பொறுப்புகளை எடப்பாடியார், தற்போது உடுமலை ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்துள்ளார். இதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடிக்கு நெருக்கமான இரண்டு மணிகளுக்கு பிறகு உடுமலையார் தான் என்கிற பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!