ரஜினியை தூக்கி எறிந்து பேசிய பிக்பாஸ் பிரபலம்...!! கமல் ஒரு ஆண் தேவதை என்றும் அதிரடி...!!

Published : Oct 10, 2019, 09:18 AM ISTUpdated : Oct 10, 2019, 04:07 PM IST
ரஜினியை தூக்கி எறிந்து பேசிய  பிக்பாஸ் பிரபலம்...!! கமல் ஒரு ஆண் தேவதை என்றும் அதிரடி...!!

சுருக்கம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவரது கட்சியில் நான் ஒரு கடைநிலை தொண்டனாக இருக்கிறேன் அப்படி இருக்கையில் நான் ஏன் ரஜினி கட்சிக்கு செல்ல வேண்டும்.? 

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால்  அவரது கட்சிக்கு செல்ல மாட்டேன், மக்கள் நீதி மையத்தில்தான் தான் இருப்பேன் என்று பிக்பாஸ் சினேகன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். அவரை பற்றி பரவிய தகவலுக்கு இவ்வாறு அவர்பதிலளித்தார்.

பிக் பாஸ் சீசன் -2  மூலம் பினாலே வரை முன்னேறி, இரண்டாம்  இடத்தைப் பிடித்து,  மக்கள் மத்தியில் பிரபலமானவர் சினேகன்.  அவர் கவிஞராக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியே அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது என்றே சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவருக்கும் நடிகர் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக,பிக்பாஸ் முடிந்த கையோடு  மக்கள் நீதி மையத்தில் இணைந்தார், அவருக்கு அதில்  முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.  அதனையடுத்து  நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் சிவகாசி நாடாளுமன்ற தொகுதியிலும் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளராக போட்டியிட்டு அதில் தோற்றார்.

இதனையடுத்து சினேகனுக்கு மக்கள் நீதி மய்யத்தில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று தகவல் பரவியதுடன்,  அவர் அக் கட்சியிலிருந்து விலகி  ரஜினியுடன் இணையப் போகிறார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  சினேகனிடம், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் சேருவீர்களா என்று  செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நான் எப்படி ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு செல்வேன்.? எனக்கு பிடித்த தலைவர் கமல்ஹாசன்தான் அவரை நான் ஒரு ஆண் தேவதையாகவே பார்க்கிறேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவரது கட்சியில் நான் ஒரு கடைநிலை தொண்டனாக இருக்கிறேன் அப்படி இருக்கையில் நான் ஏன் ரஜினி கட்சிக்கு செல்ல வேண்டும்.? என்றதுடன் நான் யாருக்காகவும் தலைவர் கமல் ஹாசனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார். அவரின் பேச்சு கமல் ரசிகர்களையும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!