வசந்தகுமாரை குலுங்கி குலுங்கி அழவைத்த கிராமத்து பெருசு... அந்த சிறப்புமிக்க சம்பவம் தான் என்ன?

Published : Oct 10, 2019, 11:55 AM IST
வசந்தகுமாரை குலுங்கி குலுங்கி அழவைத்த கிராமத்து பெருசு... அந்த சிறப்புமிக்க சம்பவம் தான் என்ன?

சுருக்கம்

கன்னியாகுமரி சிட்டிங் எம்.பி வசந்தகுமாருக்கு நாக்கில் சனி என்றுதான் சொல்லணும். வில்லேஜ் பெருசிடம் சிக்கி சீரழிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

“அவர்களுக்கென்ன ஏ.சி கார்களில் ஹாயாக பறக்கிறார்கள்“ என அரசியல்வாதிகளைப் பார்த்து எளிதாக சொல்லிவிடுகிறோம்.  ஆனால் `பெரியோர்களே...தாய்மார்களே” என கும்பிடு போடும் தேர்தல் சமயத்தில் அவர்கள் படும் பாடு இருக்கிறதே…அப்பப்பா அந்த கொடுமையை எப்படி சொல்றது அதிலும் தொகுதிக்கும் மக்கள் பிரச்சனைகளை சொன்னாலும் பரவாயில்லை, ஏதாவது பேசினாலே பங்கமாக கலாய்ப்பது என நாளைக்கு நாள் தெறிக்கிறது.  அதுவும் கன்னியாகுமரி சிட்டிங் எம்.பி வசந்தகுமாருக்கு நாக்கில் சனி என்றுதான் சொல்லணும்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்குனேரி எம்.எல். ஏ பதவியை ராஜினாமா செய்து இடைத் தேர்தலுக்கு விதை போட்டதே அண்ணன் தான். தற்போது காங்கிரஸ் சார்பில் களமிறங்கியிருக்கும்  ரூபி மனோகரனுக்கு ஆதரவாக வசந்தகுமார் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் வசந்தகுமார்.

சவளைக்காரன் குளம் என்ற இடத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வசந்தகுமாருக்கு முதியவர் ஒருவர் கைகூப்பி வணக்கம் சொல்ல, பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் கொஞ்சமல்ல நெட்டிசன்களையே மீம்ஸ் போட வைத்துவிட்டது, “வணக்கம்  அண்ணாச்சி …நான் போன தடவை உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன், அப்படியா  ரொம்ப சந்தோஷம். இந்தத் தடவை நம்ம ஆளு ரூபி மனோகரனுக்கு போடுங்க, ஏன் உங்க பதவி என்னாச்சிது? நான் கன்னியாகுமரி எம்.பி ஆகிட்டேன்ல. அதான் இங்க இடைத் தேர்தல் நடக்குது.

உடனே அந்த பெரியவர், ஆமாம் நான் தெரியாமத் தான் கேட்கிறேன். பொதுவா யாராவது மண்டையப் போட்டால்தானே அங்கு இடைத் தேர்தல் வரும்?  நீங்க குத்துக்கல்லாட்டம் இருக்கும்போது…’’ என வயது முதிர்ந்த அந்த பெருசு கலாய்த்து தள்ள, மனுஷன் விட்டால் போதுமென இடத்தை காலி செய்திருக்கிறார்…வசந்த் அண்ட் கோ வசந்தகுமார். அதோடில்லாமல்  இந்த சிறப்பு வாய்ந்த சம்பவத்திற்கு முன் திண்ணை பிரசாரம் பண்ணவே பிளான் போட்டாராம், ஆனால் இந்த பெருசு கொடுத்த லந்தால் மனுஷன் பிரசார வேனை விட்டு ரெண்டு நாளாய் இறங்குவதே இல்லையாம்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை