
பா.ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சி
தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு ராம்நாத் கோவிந்த் சரியான நபர். அவருக்கு எங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும். தலித் சமூகத்தில் இருந்த வந்த கோவிந்த் உயர்ந்த எண்ணங்களும், மிகவும் புத்திசாலியானவர். இவர் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர்’’ எனத் தெரிவித்தார்.
'
ராம் விலாஸ் பாஸ்வான்
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், “ தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத்கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தது, வரலாற்று சிறப்பு மிக்க முடிவு. எதிர்க்கட்சிகள் அனைவரும், அரசியலைக்க கடந்து இவரை ஆதரிக்க வேண்டும். ஒருவேளை கோவிந்தை நீங்கள் ஆதரிக்காவிட்டால், தலித்துக்கு எதிரானவர்கள். கோவிந்த் தேர்வு மோடியின் மிகச்சிறந்த செயல். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு திட்டம் இருக்கும். தலித்துக்களுக்காக போராடுகிறோம் என்று சில கட்சிகள் கூறுகின்றன. ஆனால், உண்மையில் அவை ஒன்றுமே தலித்துக்களாக செய்யவில்லை’’ எனத் தெரிவித்தார்.
ஜெகன்மோகன்ரெட்டி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், “ பா.ஜனதா கூட்டணி கட்சி, ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்துள்ள ராம்நாத் கோவிந்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இது தொடர்பாக பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் உறுதியளித்துவிட்டோம்’’ எனத் தெரிவித்தார்.
தெலங்கானா அரசு....
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் கூறுகையில், “ ஜனாதிபதி வேட்பாளராக ராம் நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டதும் பிரதமர் மோடி என்னைத் தொடர்பு கொண்டு உங்கள் விருப்பப்படியே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம். அவரை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டார். அதன்பின், எங்கள் கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசித்தோம். இதில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.