
விஷால் "டபுள் கேம்"...யாருக்கு ஆப்பு..? கமலா,மக்களா? விசில் சின்னமும்,கெஜ்ரிவாலின் வாழ்த்தும்...பின்னணி என்ன?
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இன்று கடைசி நாள் என்பதால் 45 சுயேச்சை வேட்பாளர்,வேட்புமனுவை தாக்கல் செய்ய காத்திருக்கின்றனர்
இதன் இடையே நடிகர் விஷாலும் ஆர்.கே நகர் தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய லைனில் காத்திருக்கிறார்
இதல நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,விஷால் கேட்டுள்ள சின்னம் விசில்..அதாவது கமல் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் பாதைக்கு தேர்வு செய்த ஒன்று விசில்.
ஊழல் நடக்கும் இடத்தில இருந்து ஒரு விசில் அடித்தால் போதும்,உடனே அதை தடுத்து நிறுத்தப்படும் என கமல் தன் ரசிகர்களுடனான கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.....
அடுத்ததாக,கமல் தான் தேர்வு செய்த அரசியல் தலைவர்களில் மிக முக்கியமான ஒருவர்,டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் என்பது நமக்கு தெரியும்...
இதனை நிரூபணம் செய்யும் வண்ணம்,டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் சென்னை வரும் போது கமல் வீட்டிற்கு நேரில் சந்தித்தார்....இரண்டு பேரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்
இந்நிலையில்,நடிகர் விஷால்,டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவாலின் வழியை பின்பற்றி தான், தான் அரசியலில் குதித்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் தெரிவித்து உள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் விஷாலுக்கு வாழ்த்து
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்
ஆக மொத்தத்தில், கமலை காப்பி அடிக்கிறாரா விஷால்....அல்லது கமலுக்கு எதிராக களத்தில் இறங்குகிறாரா?....அல்லது கமல் ஆதரவோடு தான் விஷால் களத்தில் இறங்கி உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
அதிலும் கமலுக்கு மிக முக்கிய நபரான டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால்,தற்போது விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.விஷாலும் அவர்வழி தான் என் வழின்னு....சொல்லி இருக்கிறார்.
இதிலிருந்து, என்ன புரிகிறது என்றால்....எங்கேயோ இடிக்கிறதே......