சபையில் கோப்புகளைப் பார்த்த சிங் எங்கே... சபைக்கே வராத அவர் எங்கே... வெளுத்துகட்டிய அழகிரி!

By Arun VJFirst Published Mar 2, 2019, 4:20 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. 

 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில் மாநிலங்களவையில் எம்.பி.கள் என்ன செய்தார்கள் என மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேசினார். இதைப் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.   

 “காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பாஜக எப்படியெல்லாம் நாடாளுமன்றத்தை முடக்கியது என்பது நாட்டுக்கே தெரியும். நாடாளுமன்றத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். எந்த நாடாளுமன்ற விவாதங்களிலும் அவர் பங்கேற்பதே கிடையாது, சபைக்கு வந்து உட்கார்வதும் கிடையாது. 

ஆனால், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, கடுமையான வேலை நெருக்கடி என்றால் கோப்புகளுடன் அவைக்கு வந்துவிடுவார். கோப்புகளையும் பார்ப்பார், முக்கியமான விவாதங்களையும் கவனித்துக்கொண்டே இருப்பார். இந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தை முற்றிலுமாகப் புறக்கணித்த பிரதமர்தான், தேர்தலில் வாக்குக் கேட்டு வருகிறார். இந்தக் கேள்வியை அவரிடம் மக்கள் நிச்சயம் கேட்பார்கள்” இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

 

click me!