’இரட்டை இலை சின்னம் வேண்டாம்...’ திணறடிக்கும் கூட்டணி கட்சிகள்..! இறங்கி வந்த அதிமுக... தெறிக்கவிடும் தேமுதிக..!

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2019, 4:14 PM IST
Highlights

தேமுதிக என்கிற ஒரே கட்சியால் கூட்டணி இறுதி முடிவை வெளியிடாமல் கோயம்பேட்டை நோக்கிக் காத்திருக்கிறது அதிமுக. இந்நிலையில் தேமுதிக வெவ்வேறு டிமாண்டுகளை வைத்து வருவதாக கூறப்படுகிறது. 

தேமுதிக என்கிற ஒரே கட்சியால் கூட்டணி இறுதி முடிவை வெளியிடாமல் கோயம்பேட்டை நோக்கிக் காத்திருக்கிறது அதிமுக. இந்நிலையில் தேமுதிக வெவ்வேறு டிமாண்டுகளை வைத்து வருவதாக கூறப்படுகிறது. 

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் என கட்சிகள் தொகுதி உடன்பாட்டை முடித்து விட்டது. இந்தக்கூட்டணியில் தேமுதிக, தாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் தாமகவுக்கு ஒரு தொகுதியும், தேமுதிகவுக்கு 5 மக்களவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்க அதிமுக முன் வந்துள்ளது. இந்த ஆஃபருக்கு தேமுதிகவும் சம்மதம் தெரிவித்துள்ளது.  

பொதுவாக அதிமுக மற்ற கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டு குழுவுக்கு முன்பாக ஒரு டீம் சென்று பேசும். அதில் கூட்டணி கட்சிகளிடம் அதிமுக சார்பில் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்படும். சட்டசபை இடைத்தேர்தலில் உங்களுக்கு சீட் கிடையாது ஆனால் ஆதரிக்க வேண்டும். உங்களுக்கு எம்பி சீட் மற்றும் தேர்தல் செலவை நாங்கள் ஏற்போம். தொண்டர்களை உண்மையாக உங்களுக்கு தேர்தல் பணியாற்ற செய்வோம் என்று அதிமுக தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்படுகிறது. சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறதாம்.

அதை கேட்கும் கூட்டணி கட்சிகள், சட்டசபை தேர்தல் உங்களுக்கு முக்கியம். ஆகையால் ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளை எங்களுக்கு குறைந்தபட்சம் உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, செல்வாக்குள்ள நகராட்சிகளை விட்டுத்தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. அத்துடன் சின்னங்களை பெறுவதற்கும், அங்கீகாரம் பெறுவதற்கும் சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என சில கட்சிகள் பிடிவாதம் பிடிப்பதால் அதிமுக தரப்பு சற்று இறங்கி வருகிறது. புதியதமிழகம் கட்சி தனிச்சின்னத்தில் நிற்கப்போவதாக அறிவித்ததும் இப்படித்தான். 

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் 20 சதவிகித இடங்கள் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிமுக சார்பில் 12 சதவிகித இடங்கள் தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் தேமுதிக சம்மதம் தெரிவித்துள்ளது. இப்போது எந்தத்தொகுதிகளில் போட்டியிடுவது என்கிற விஷயம் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதால் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 

click me!