குடியுரிமை பெறும் புலம் பெயர்ந்த இந்துக்களை எங்கு குடி வைப்பீங்க ? உத்தவ் தாக்ரே அதிரடி கேள்வி ?

By Selvanayagam PFirst Published Dec 20, 2019, 10:17 AM IST
Highlights

குடியுரிமை  திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறும் புலம் பெயர்ந்த  இந்துக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள்? என்று மத்திய அரசுக்கு,  மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
 

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் , வங்க தேசம் போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்ட்ரா  சட்டசபையில் கவர்னரின் உரை மீதான உறுப்பினர்கள் விவாதத்திற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதில் அளித்து பேசினார்.அப்போது ,  ‘குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் குடியுரிமை பெறும் புலம்பெயர்ந்த இந்துக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள் என்பதை அறிய விரும்புகிறேன் என மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கான திட்டம் உங்களிடம் (மத்திய அரசு) இருக்கும் என நான் நினைக்கவில்லை’ என்றும் இது தொடர்பாக என்ன செய்யப் போகிறீர்கள் என மோடி மற்றும் அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்ரே அடுக்கடுக்காக  கேள்வி எழுப்பினார்.

click me!