ரஜினி தலைமையில் கூட்டணி அமைந்துவிடக்கூடாது..! பதறும் திமுக..! கமலைத் தேடி ஓடியதன் பின்னணி..!

By Selva KathirFirst Published Dec 20, 2019, 10:16 AM IST
Highlights

திடீரென நேற்று முன்தினம் கமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் மு.க.ஸ்டாலின். பிறகு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், திமுக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கமலை நேரில் சந்தித்து பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். வெறும் மூன்றே நாளில் எலியும் பூனையுமாக இருந்த கட்சிகளுக்கு இடையே சுமூக உறவு ஏற்பட்டுள்ளது.

திடீரென நடிகர் கமலை தேடி திமுக ஓடிச் சென்று இருப்பதன் பின்னணி முழுக்க முழுக்க சட்டமன்ற தேர்தல் கணக்கு தான் என்கிறார்கள்.

திடீரென நேற்று முன்தினம் கமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் மு.க.ஸ்டாலின். பிறகு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், திமுக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கமலை நேரில் சந்தித்து பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். வெறும் மூன்றே நாளில் எலியும் பூனையுமாக இருந்த கட்சிகளுக்கு இடையே சுமூக உறவு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் திமுகவின் சட்டமன்ற தேர்தல் கணக்கு உள்ளது என்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ரஜினி தலைமையிலான கூட்டணியில் கமல், விஜயகாந்த், ராமதாசை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டணிக்கு விஜயின் ஆதரவை பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படி பேச்சு வழக்கில் உள்ள இந்த முயற்சி கைகூடினால் அது சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி சேர்ந்த காரணத்தினால் அதிமுக அமோக வெற்றி பெற்றது. பலமான கூட்டணி இல்லாத திமுக தோல்வி அடைந்தது. அதன் பிறக 2014 தேர்தலில் விஜயகாந்த் – பாஜக – ராமதாஸ் இணைந்து அமைத்த கூட்டணியால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. இதே போல் 2016 தேர்தலில் விஜயகாந்த், வைகோ, திருமா, இடதுசாரிகளின் மக்கள் நலக்கூட்டணியால் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு தவிடு பொடியானது.

இப்படி கூட்டணி கணக்கால் ஒவ்வொரு முறையும் திமுக தோல்வியை சந்தித்து வருகிறது. அதே போன்றதொரு நிலை சட்டமன்ற தேர்தலில் வந்துவிட்டால் என்ன என்பது தான்திமுகவின் பதற்றத்திற்கு காரணம். முன்கூட்டியே கமல் போன்றோரை வளைத்துப் போடும் பட்சத்தில் ரஜினி தலைமையில் கூட்டணி அமைவதை தடுத்துவிடலாம் என்று திமுக தலைமை கணக்கு போடுகிறது. தங்களுடன் பலமான கட்சி இல்லை என்றாலும் எதிரியுடன் பலமான கட்சி இருக்க கூடாது என்கிற வியூகத்தை ஜெயலலிதா 2 முறை அமல்படுத்தி 2 முறையும் வென்றார்.

அதே போல் ரஜினியை அரசியல் அரங்கில் கூட்டணி பலம் உள்ளவராக காட்சிப்படுத்தக்கூடாது என்பதற்காகவே கமலை தேடிச் சென்று பேரணியில் பங்கேற்க திமுக அழைத்துள்ளதாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் கமல் திமுகவுடன் கூட்டணி அமைப்பாரா? இல்லை ரஜினிக்கு கை கொடுப்பாரா என்பது தேர்தல் சமயத்தில் தான் தெரியும்.

click me!