பொங்கல் பரிசு எங்க வாங்குனீங்க..??? வெள்ளை அறிக்கை வெளியிடுங்க.. திமுகவை திணறடிக்கும் கிருஷ்ணசாமி.

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2022, 1:48 PM IST
Highlights

பொங்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்கள் எங்கு கொள்முதல் செய்யப்பட்டது, அந்த பொருட்களின் சந்தை விலை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது, அந்தப் பொருட்களின் சந்தை விலை என்ன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்துள்ளார். மேலும் காவல்துறை என்பது மத்திய மாநில அரசின் பொது பங்களிப்பில் இருக்க வேண்டும் அப்போது தான் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர் படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல்  அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் ஒவ்வொரு திட்டங்களையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். கொரோனா மற்றும் மழை வெள்ளத்தின் போது அரசு செயல்பட்ட விதம்  மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.  இது ஒருபுறம் இருந்தாலும் எது கட்சிகளான அதிமுக, பாஜக தமிழக அரசினை திட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு என்றும், பெட்ரோல் டீசல் விலையை மற்ற மாநிலங்கள் குறைத்தும்,  அதன் மீதான மாநில வரியை  திமுக அரசு ஏன் குறைக்கவில்லை என்றும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதேபோல் இன்னும் சில எதிர் கட்சிகளான பாமக புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் அவ்வப்போது ஸ்டாலின் தலைமையிலான அரசை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் என்றும், அந்த பொருட்களின் உரைகள் இந்தியில் அச்சிடப்பட்டுள்ளது என்றும், அந்தப் பொருட்களில் தரமானதாக இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 21 பொருட்கள் கொடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில் 18 ,16 பொருட்களே அதில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதற்கான வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது. அதேபோல் கொடுக்கும் பொருட்களில் வண்டு, பூச்சிகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் ஸ்டாலின் மாறுவேடத்தில் நியாயவிலை கடைகளுக்கு  சென்று கேட்டால் தமிழக அரசின் உண்மை நிலை என்னவென்று புரியும் என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் தியாகராய நகரில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்தித்தார். அப்போது பைசிய அவர், தமிழக அரசு வழங்கும் பொங்கல் பொருட்கள் தரமற்றதாக உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கொங்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு டெண்டர் வெளிப்படையாக விடப்பட்டதா என்பது குறித்தும், பொங்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்கள் எங்கு கொள்முதல் செய்யப்பட்டது, அந்த பொருட்களின் சந்தை விலை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!