பெண்கள் வாக்குகளை அள்ளப்போகும் திமுக..! எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

Published : Feb 25, 2023, 11:29 AM ISTUpdated : Feb 25, 2023, 12:06 PM IST
பெண்கள் வாக்குகளை அள்ளப்போகும் திமுக..! எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

சுருக்கம்

நிதிநிலை சரியாக இருந்திருந்தால் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டிருக்கும். நிதிநிலை சரியாக இல்லாததால் அறிவிப்பதில்  தாமதம் ஏற்பட்டதாக கூறினார். மகளிர் உரிமைத் தொகை குறித்து நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்.

திமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, அவர் பேசுகையில்;- திமுகவின் அடித்தளமே ஈரோடுதான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு தான். சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன். 

இதையும் படிங்க;- நீட் தேர்வு: புதிய வழக்கு பதிவு செய்ததை திசை திருப்பும் அதிமுக - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொதுத்தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், நான் முதல்வன், பெரியாரின் பிறந்தநாளை சமூகநிதி நாளாக அறிவிப்பு என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். நாங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக, தவறான தகவலைத் தெரிவிக்க விரும்பவில்லை. 

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதிநிலை சரியாக இருந்திருந்தால் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டிருக்கும். நிதிநிலை சரியாக இல்லாததால் அறிவிப்பதில்  தாமதம் ஏற்பட்டதாக கூறினார். மகளிர் உரிமைத் தொகை குறித்து நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்.

இதையும் படிங்க;-  மதுரைக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் என்னை சந்திக்க உள்ளாரா..? மு.க அழகிரி கூறிய பரபரப்பு தகவல்

 கடந்த தேர்தலில் திருமகன் ஈவெரா 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும். என்னுடைய ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி