மறைந்த தாயின் காலை பிடித்து கதறிய ஓபிஎஸ்.. அண்ணே கலங்காதீங்க.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!

By vinoth kumar  |  First Published Feb 25, 2023, 8:09 AM IST

வயது மூப்பு காரணமாக சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்காததால் நேற்று இரவு பழனியம்மாள் காலமானார். இது தொடர்பாக ஓபிஎஸ் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் இருந்து பெரிகுளத்திற்கு விரைந்தார்.

O.Panneerselvam mother passed away... CM stalin condolence

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95). இவர், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பழனியம்மாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரெனெ உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

அவரை நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு தாயாரின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஓபிஎஸ் சென்னை வந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்காததால் நேற்று இரவு பழனியம்மாள் காலமானார். இது தொடர்பாக ஓபிஎஸ் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் இருந்து பெரிகுளத்திற்கு விரைந்தார். 

அப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த தாயின் உடலை பார்த்து உடைந்துபோய் அவரது காலை பிடித்து கதறி அழுதார். அதன்பின் அங்கிருந்தவர்கள் அவரை தேற்றியபின் சமாதானம் அடைந்தார். ஓபிஎஸ் தயாரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளடுவிட்டர் பதிவில்;- முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.

ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

vuukle one pixel image
click me!