TN School Open: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!

Published : Jan 26, 2022, 11:14 AM IST
TN School Open: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் திடீரென கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. மறுபுறம் ஒமிக்ரானும் மிரட்ட தொடங்கியது.  இதனால், கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முக்கிய பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினுக்கு செய்து இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் திடீரென கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. மறுபுறம் ஒமிக்ரானும் மிரட்ட தொடங்கியது.  இதனால், கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு நீடிப்பு, பள்ளிகள் திறப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முதலமைச்சர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். அரசு பள்ளிகளை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இருமொழி கொள்கைதான் நமது கொள்கை, அதிலிருந்து பின்வாங்க மாட்டோம். 

பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்த ஆலோசனை செய்து வருகிறோம். 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும்.

கொரோனா கேஸ்கள் தொடர்பாக சுகாதாரத்துறையுடன் ஆலோசனைகளை செய்து வருகிறோம். ஆலோசனைக்கு பின்பாக தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும் என தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!