
சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்றம் அவரை உடனடியாக சரண் அடைந்து ஜெயில் தண்டனையை அனுபவிக்கும்படி உத்தரவிட்டு இருந்தனர்.
4 ஆண்டு சிறைத் தண்டனையில் ஏற்கனவே ஏறத்தாழ 6 மாதங்கள் அவர் சிறையில் இருந்து இருப்பதால் இன்னும் மூன்றரை ஆண்டு காலம் அவர் சிறையில் இருக்க வேண்டும்.
தீர்ப்பு வெளியாகும்போது சசிகலா கூவத்தூர் விடுதியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் தங்கி இருந்தார். தீர்ப்பு வந்ததும் உடனடியாக அவர் கைது செய்யப்படவில்லை.
தீர்ப்பு வெளியானதும் கர்நாடக மாநில அரசின் தலைமை வக்கீல் மதுசூதன் நெயில் தலைமை நீதிபதியை சந்தித்து, சசிகலாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நீதிபதியின் பெயரை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
நீதிபதியின் பெயர் அறிவிக்கப்பட்டதும், சசிகலா பெங்களூரு சென்று அவர் முன்னிலையில் சரண் அடைவது எப்போது? என்பது அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.