ஜெ.வால் விரட்டப்பட்ட டிடிவி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் அதிமுகவில் மீண்டும் சேர்ப்பு - மன்னிப்பு கேட்டதால் சசிகலா தாராளம்

 
Published : Feb 15, 2017, 09:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஜெ.வால் விரட்டப்பட்ட டிடிவி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் அதிமுகவில் மீண்டும் சேர்ப்பு - மன்னிப்பு கேட்டதால் சசிகலா தாராளம்

சுருக்கம்

2011ஆம் ஆண்டு சசிகலா, தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார் ஜெயலலிதா.

தனக்கெதிராக சதி செய்தார்கள் ஆட்சியை கைப்பற்ற அந்த குடும்பமே சதி செய்தது என கூறி அத்தனை பேரையும் விரட்டினார் ஜெயலலிதா.

அப்போது தான் மிகப்பெரிய அளவின் கை ஓங்கியிருந்த தினகரன், வெங்கடேஷ் ஆகியோருக்கு இறங்குமுகம் ஏற்பட்டது.

டிசம்பர் 2011 முதல் செப் 22 ஜெ உடல்நிலை பாதிக்கப்படும்வரை அரசியலில் தலை தூக்காமல இருந்தனர் இவர்கள்.

6 வருட காலமாகவே எந்த ஒரு விசயத்தையும் நேரடியாக செய்ய முடியாமல் சசிகலா மூலமாகவே சாதித்து வந்தனர்.

டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் அழுத்ததை பார்த்து புதுச்சேரியில் செட்டில் ஆகி இருந்தார்.

எந்த ஒரு அரசியல் தலையீடும் செய்யாமல் ஆதரவாளர் கூட்டத்தையும் வளர்க்காமல் ஒதுங்கியிருந்தார்.

ஆனால் டாகடர் வெங்கடேஷோ ஜெ. கிடிக்கிபிடி போட்டு கண்காணித்து வந்த ஜெயாடிவியில் தனது ஆட்களை நியமித்து உள்ளடி வேலைகளை செய்து வந்தார்.

தன்னால் அடையாளம் காணப்பட்ட அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன் ஆகியோரை வைத்து அரசியலும் செய்து வந்தார்.

கடந்த 6 ஆண்டுகாலமாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் கூட இல்லாமல் இருந்த இந்த இருவரையும் சிறைசாலைக்கு செல்லவுள்ள நிலையில் சசிகலா தற்போது அடிப்படை உறுப்பினர் பதவியில் நுழைத்து விட்டு சென்றுள்ளார்.

இதன் மூலம் இனி கட்சியிலும் ஆட்சியிலும் இவர்கள் இருவரும்தான் கொலோச்சுவார்கள் என தெரிகிறது.

ஆட்கள் மட்டுமே மாறப்போகிரார்கள் ஆனால் காட்சி ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு