தமிழகத்தில் தேர்தல் எப்போது..? தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கியத் தகவல்..!

Published : Nov 19, 2020, 10:44 AM IST
தமிழகத்தில் தேர்தல் எப்போது..? தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கியத் தகவல்..!

சுருக்கம்

தேர்தல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை. அந்த விஷயத்தில் நாங்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்க மாட்டோம். 

தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்றால் எந்தத் தேர்தலும் நடத்தப்படாது என கருதப்பட்ட நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் தமிழகத்தில் சட்ட மன்றத்தேர்தலும் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 


இது தொடர்பாக பேசிய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ’’கொரொனாவுக்கு மத்தியில் பீகார் தேர்தல் பணிகளை தொடங்கியபோது இது மடத்தனம் என சிலர் நினைத்தனர். ஆனால், அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். தேர்தல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை.

 

அந்த விஷயத்தில் நாங்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்க மாட்டோம். தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு சரியான நேரத்தில் நடைபெறும்’’என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!