வானதி சீனிவாசனுக்கு டெல்லியில் வரவேற்பு..! கோவை டூ டெல்லி உற்சாகத்தில் பாஜக மகளிர் அணி..!

By T BalamurukanFirst Published Nov 19, 2020, 9:07 AM IST
Highlights

பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் டெல்லியில் இன்று காலை பொறுப்பேற்கிறார். டெல்லியில் வானதி சீனிவாசன் பொறுப்பு ஏற்கும் நிகழ்வு மிக எளிமையாக நடைபெறும் என பாஜக தலைமை தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் டெல்லியில் இன்று காலை பொறுப்பேற்கிறார். டெல்லியில் வானதி சீனிவாசன் பொறுப்பு ஏற்கும் நிகழ்வு மிக எளிமையாக நடைபெறும் என பாஜக தலைமை தெரிவித்துள்ளது.


கோவை மாவட்டம். தொண்டாமுத்தூரில் 1970ம் ஜூன் மாதம் பிறந்தவர் வானதி சீனிவாசன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். பாஜக கட்சியில் இணைந்த வானதி சீனிவாசன், 1993ம் ஆண்டு முதல் அக்கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இவர் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.

தற்போது தமிழக பாஜகவின் துணைத் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வரும் வானதி சீனிவாசனுக்கு பாஜக மகளிரணியின் அகில இந்திய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் வானதி சீனிவாசனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பலரது பாராட்டுக்களைப் பெற்று தந்துள்ளது.இந்த நிலையில், வானதி சீனிவாசன் டெல்லியில் தேசிய மகளிரணித் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். 

 இவரை தேசிய மகளிரணித் தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்துள்ளார்.
தமிழகர்களை தொடர்ந்து பாஜக பெருமைபடுத்தி வருகிறது. இதற்கு முன்னர் தமிழக பாஜக தலைவராக இருந்து தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து கவுரவித்தது. அதே போன்று பலருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுபோன்ற பதவிகள் எல்லாம் கொடுத்து அழகு பார்க்கும் பாஜகவின் பின்னணியில் தமிழக சட்டமன்றத்தேர்தல் இருக்கிறது. பீகார் போன்று தமிழகத்திலும் அரசியல் மிராக்கல் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
 

click me!